உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீராய் செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

மதுரை அரசு மருத்துவமனையில் தண்ணீராய் செலவாகுது மக்கள் பணம்; ஓராண்டு செலவு மட்டும் 2 கோடி ரூபாய்!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் குடிநீர், கழிப்பறை பயன்பாட்டுக்காக தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால் பற்றாக்குறையால் 45 லோடு லாரிகளில் ரூ.72 ஆயிரம் கட்டணத்தில் தண்ணீர் வாங்கப்படுகிறது.இங்குள்ள பழைய வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொட்டி7கள் அமைக்கப்பட்டு மொத்தம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கும் வசதியும் குழாய் இணைப்புகளும் உள்ளன. ஆனால் 6 ஆழ்துளை கிணறுகள் துார்ந்து விட்டன. 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 சதவீத தண்ணீர் தேவையை கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. மேலும் அரசு மருத்துவக்கல்லுாரி அருகிலும் எதிரிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, தீவிர விபத்து பிரிவு வளாகங்கள் கட்டப்பட்டதால் தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக உருவெடுத்தது.இரண்டாண்டுகளுக்கு முன் ரூ.1.35 கோடி மதிப்பில் வைகையாற்றிலிருந்து (மணலுார் உறைகிணறு பகுதி) தண்ணீரை குழாய் மூலம் பெற்று தெப்பக்குளம் பகுதியில் இருந்து பழைய வளாகத்திற்கு தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.உறைகிணறு மோட்டார்கள் பழுதடைவதாலும் இணைப்பு குழாய்களில் பிரச்னையாலும் தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் கூடுதலாக ஜப்பான் நாட்டு நிதியில் ரூ.313 கோடி மதிப்பில் புதிய அறுவை சிகிச்சை வளாகம் ஆறு மாடியில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.எனவே ரூ.25 லட்சம் மதிப்பில் முல்லைப்பெரியாறு குடிநீர்த்திட்டத்தின் கீழ் குருவிக்காரன் சாலை பாலம் பகுதியில் இருந்து மாநகராட்சி குழாய்கள் மூலம் தண்ணீரை பழைய வளாகத்திற்கு கொண்டு வருவதற்காக மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதிலிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறலாம். எவ்வளவு தண்ணீர் கிடைத்தாலும் வார்டுகளில் உள்ள கழிப்பறை, குளியலறை, அறுவை சிகிச்சை அரங்குகளின் குழாய்களுக்கு நேரடியாக செல்கிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் மேல்நிலைத்தொட்டி அமைக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மகப்பேறு வார்டு அருகில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. மேல்நிலைத் தண்ணீர்த்தொட்டி அமைத்தால் 20 லட்சம் கொள்ளளவுள்ள தண்ணீரை சேமித்து 25 எச்.பி., மோட்டார் மூலம் ஒரு மணி நேரத்தில் 80 ஆயிரம் லிட்டரை வார்டுகளுக்கு அனுப்பலாம்.பழைய வளாகத்திற்கு 20 லோடு, மற்ற இரு வளாகத்திற்கு 25 லோடு என 45 லோடு லாரி தண்ணீருக்கு தினமும் ரூ.72 ஆயிரம் கட்டணம் செலுத்துகின்றனர். ஓராண்டு வாடகையை கணக்கிட்டால் ரூ.2.62 கோடி செலவாகுது என்பதால் அரசு தாமதமின்றி மேல்நிலைத் தொட்டி அமைக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S.jayaram
மார் 07, 2025 12:58

செயல்பாடுகளில் காலதாமதம் பண்ண விரையம் ஆகிறது ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது ஒரேவருடதில் கட்டிடம்கட்டி அப்பபெயர் வைக்கத்தெரிந்த முதல்வருக்கு தினசரி தென்மாவட்டங்களுக்கு எல்லாம் தலைமை மருத்துவமனைக்கு பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் உள்ளனர்,வருகின்றனர் அவர்களின் தண்ணீர் தேவையைக் கூட உடனுக்குடன் தீர்வை எட்டாமல் இப்போதான் இடம் பார்க்கிரார்களாம் டேங்க் கட்ட


lana
மார் 06, 2025 11:01

அந்த contract எல்லாம் கட்சி க்கு தானே. எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள்.