உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

குழந்தை தொண்டையில் சிக்கிய மிட்டாய்; காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டு

கோவை: தொண்டையில் மிட்டாய் சிக்கி மயக்கமடைந்த குழந்தைக்கு, முதலுதவி செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றினர். மேட்டுப்பாளையம் - போத்தனுார் இடையே, மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காரமடையை சேர்ந்த செல்வலட்சுமி என்பவர், தனது இரண்டு வயது குழந்தை தேவ் ஆதிரனுடன் காரமடையில் இருந்து, போத்தனுாருக்கு பயணித்தார். குழந்தைக்கு அவர் மிட்டாய் கொடுத்துள்ளார். மிட்டாய் குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதையடுத்து குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது மட்டுமல்லாமல், குழந்தை மயக்க நிலைக்கும் சென்றது. பதட்டமடைந்த செல்வலட்சுமி, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். தகவல் அறிந்து வந்த, ரயில்வே பாதுகாப்பு படை போத்தனுார் இன்ஸ்பெக்டர் சுனில்குமார், ஏ.எஸ்.ஐ., சஜினி ஆகியோர், குழந்தையை தலைகீழாக கவிழ்த்து, முதுகில் தட்டினர். இதில், தொண்டையில் சிக்கியிருந்த மிட்டாய் வெளியில் வந்து விழுந்தது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியது. ரயில் கோவை வந்ததும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தக்க சமயத்தில் செயல் பட்டு, குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை, தாய் செல்வலட்சுமி கையெடுத்து கும்பிட்டார். பயணிகள் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.

பதற்றம் கூடாது'

கோவை அரசு மருத் துவமனை டீன் கீதாஞ் சலி கூறுகையில், ''குழந் தைகள் மிட்டாய் உட் கொள்ளும்போது, சில சமயங்களில் உணவுக் குழாய்க்குள் செல்வதற்கு பதில், மூச்சுக்குழாய்க்குள் சென்று விடும். அதுபோன்ற சமயங்களில் மூச்சுத்திணறல் ஏற்படும். '' பதற்றமடையாமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !