உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சிப்ஸ் பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு

சிப்ஸ் பாக்கெட்டில் கருகிய நிலையில் பாம்பு

தட்சிணகன்னடா: கர்நாடகாவில், சிறுமி ஒருவர், கடையில் இருந்து வாங்கிச் சென்ற சிப்ஸ் பாக்கெட்டில், எரிந்து கருகிய பாம்பு துண்டு இருந்ததை கண்டு, கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடகாவின், தட்சிணகன்னடா மாவட்டம், முன்டாஜே அருகில் உள்ள சோமந்தட்கா கிராமத்தில் வசிக்கும், 10 வயது சிறுமி, இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இருந்த கடையில் சிப்ஸ் பாக்கெட் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்தார். அதை பிரித்து சில சிப்ஸ்களை சாப்பிட்டார். அப்போது பாக்கெட்டுக்குள் எரிந்து கருகிய பாம்பின் உடல் இருந்தது. இதை தன் பெற்றோரிடம் கூறினார். பீதியடைந்த பெற்றோர், உடனடியாக மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, 'எந்த பாதிப்பும் இல்லை' என, கூறிய பின் நிம்மதி அடைந்தனர். 'சிப்ஸ் பாக்கெட்டுக்குள், பாம்பின் எரிந்த உடல் எப்படி வந்தது' என, கடைக்காரரிடம் விசாரித்தனர். அவருக்கும் தெரியவில்லை. இந்த சம்பவத்தால் கிராமத்தினர் கிலி அடைந்துள்ளனர். இத்தகவல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajan A
நவ 08, 2025 17:40

எந்த கம்பெனி என்று ஏன் போட கூடாது?


m.arunachalam
நவ 08, 2025 09:36

இவை அனைத்தும் பெண்களின் வாழ்க்கை முறை மாற்றத்தால் வருபவை. வீட்டில் தின்பண்டம் செய்வதை நிறுத்தி விட்டு பிறரை சார்ந்திருத்தல் வரவைக்கும் கேடுகள். அருகதை இல்லாத அளவற்ற சுதந்திரம் தரும் கேடுகள். தெளிதல் நலம்.


angbu ganesh
நவ 08, 2025 09:31

அட தூக்கி போட்டுட்டு சாப்பிடுங்கப்பா இப்போ எல்லாமே விசம்தான் பாம்பின் விஷத்தை விட அதிகமா சாப்பாட்டுல கொட்டறானுங்க, நல்ல பாருங்க அது பம்ம்புதன இல்ல கருவேப்பிலைன்பாணுங்க


முதல் தமிழன்
நவ 08, 2025 09:19

கட்டுப்பாடற்ற உற்பத்தியாளர்கள்


Ramesh Sargam
நவ 08, 2025 07:35

ஒருவேளை அந்த சிப்ஸ் பாக்கெட் சைனாவிலிருந்து வந்திருக்குமா?


முக்கிய வீடியோ