உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்

மாணவர் மூளைச்சாவு: உடல் உறுப்பு தானம்

திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு மாணவர், குருராஜ் நேற்று மூளைச்சாவு அடைந்தார்.திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அடுத்த பல்லகவுண்டம்பாளையம், சாம்ராஜ்பாளையம் பிரிவு பகுதியில், நேற்றுமுன்தினம் அதிவேக தனியார் பஸ் கவிழ்ந்தது. கல்லுாரி மாணவர் இருவர் உயிரிழந்தனர். மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஊத்துக்குளி அருகேயுள்ள ஊமச்சி வலசு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து -- அனிதா தம்பதி மகன், குருராஜ்,18. பெருந்துறை கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.காம்., படித்து வந்தார். பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குருராஜ், நேற்று, மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மூளைச்சாவு அடைந்த குருராஜின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.துயரமான சூழலிலும், உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன்வந்த குருராஜின் பெற்றோர் மாரிமுத்து - அனிதாவின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ