உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்

ஆசையாக வளர்த்தவரை கொன்று விழுங்கிய சிங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாக்தாத் : மேற்காசிய நாடான ஈராக்கில், நஜாப் மாகாணத்தில் உள்ள அல்-பராக்கியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் அஹில் பக்ர் அல்-தின், 50. இவர், விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். தன் வீட்டின் தோட்டத்தில், சிங்கங்கள் மற்றும் பிற காட்டு விலங்குகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், தான் வளர்த்து வந்த சிங்கம் ஒன்றுக்கு உணவு வைப்பதற்காக, சமீபத்தில் கூண்டின் அருகே சென்றார். அப்போது, அந்த சிங்கம் பாய்ந்து அல்-தினின் கழுத்து மற்றும் மார்பு பகுதியை கடித்துக் குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் அல்தினின் உடலை அந்த சிங்கம் விடாமல் கடித்துத் தின்றது. இதைப் பார்த்து அலறிய குடும்பத்தினர், கூச்சலிட்டனர். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் அந்த சிங்கத்தை சுட்டுக்கொன்று, அல்தினின் உடலை மீட்டார். ஈராக்கில் குடியிருப்பு பகுதிகளில் விலங்குகளை வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் ஈராக் 2014ல் கையெழுத்திட்ட போதிலும், சட்டவிரோத விலங்கு கடத்தல் நாடு முழுதும் பரவலாகவே உள்ளது. இதனால், அரிய உயிரினங்கள் அழிவதும், விலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதும் தொடர்கதையாக இருப்பதாக, விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துஉள்ளனர். மேலும், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்கள் பலர், தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக சிங்கம், புலி, சிறுத்தை போன்றவற்றை செல்லப்பிராணிகள் போல் வளர்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rathna
மே 16, 2025 11:38

விலங்குகளின் உமிழ் நீர், முடி, கழிவுகள், ரத்தம், உடலுடன் நம் தோல்படுவது, நீரில், உணவில் கலப்பது போன்றவை குழந்தைகளுக்கும் வளர்ந்த பெரியவர்களுக்கும் பலவகையான உடல் மற்றும் தோல் நோய்களை உண்டாக்கும். அவற்றை உண்பது தோல் வியாதி, வெண் குஷ்டம், தோல் அரிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும். இறைவன் படைத்தவற்றை அதன் வழியில் வாழவிடாமல் தடுப்பது மற்றும் இடைஞ்சல் செய்வது மனிதனின் அழிவுக்கே காரணம். அதன் பரிசாகத்தான் இந்த மூர்க்கனின் வாழ்க்கை முடிந்து உள்ளது.


Yaro Oruvan
மே 15, 2025 12:26

அப்போ வாஜ்பாயி அமைச்சரவையில் 6 பதவி வாங்கி அனுபவிச்ச திருட்டு திமுக என்ன ஆகும்?


Bhagya
மே 15, 2025 05:04

எப்படி 200 ருபாய் உபி


venugopal s
மே 14, 2025 17:23

இதே கதி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுகவுக்கும் நடக்கும்.


Lakshmanan
மே 15, 2025 17:29

Onaai


Maruthu Pandi
மே 17, 2025 19:26

உங்களுடன் வாழப்போகும் எங்கள் எதிர்கால வாரிசுகளை நினைக்கும் போது வேதனை படாமல் இருக்க முடியவில்லை


Sathyan
மே 18, 2025 09:58

அப்படியென்றால் கெட்ட திமுகவை ஆதரிக்கும் உங்களின் வாழ்க்கையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவும்.


Karthik
மே 14, 2025 08:10

சரியான தீர்ப்பு தான். பாம்புக்கு என்னதான் பாலூட்டி வளர்த்தாலும் அது தன் குணத்தை காட்டவே செய்யும்.


Kayal Karpagavalli
மே 14, 2025 07:18

Behaviour and psychology of animals should be studied before keeping them at home... As you grow old , they dont recognize you or they find out your weak ......


புதிய வீடியோ