வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பலருக்கும் இது போல பில் வந்துள்ளது
சிமிலர் கம்பளைண்ட் எங்கும் உள்ளது
ராமநாதபுரம்: மண்டபம் அருகே வேதாளையில் சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு, 67,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தும்படி மின் வாரியம் கூறியதை கண்டித்து, குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், வேதாளையில் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ஷேக் ஜமாலுதீன் தன் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, 800 -- 1,000 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறார். கடந்த மே மாதம், 67,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என, குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியுற்றார். இதுதொடர்பாக, கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் ஜூனில் புகார் அளித்தார். ஆனால், கட்டணத்தை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என, மின்வாரியத்தினர் கூறினர். இதையடுத்து, மின்வாரியத்தை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஷேக் ஜமாலுதீன் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். மின்வாரிய உதவி பொறியாளர் நடராஜன் கூறுகையில், ''67,000 ரூபாய் மின் கட்டணம் தொடர்பாக அவரது மின் மீட்டரை ஆய்வு செய்தோம். அதில் எந்த குறையும் இல்லை. பல மாதங்களாக ரீடிங் குறைவாக கட்டியுள்ளனர். 200 முதல் 300 யூனிட் வரை குறைத்துள்ளனர். கணக்கீட்டாளர்கள் இருவரிடம் விசாரணை நடக்கிறது. கட்டணத்தை குறைத்தும், 35,570 ரூபாய் செலுத்த புகார்தாரர் மறுக்கிறார். உண்மையான மின் பயன்பாட்டை மறைக்க முயற்சி செய்கிறார்,'' என்றார்.
பலருக்கும் இது போல பில் வந்துள்ளது
சிமிலர் கம்பளைண்ட் எங்கும் உள்ளது