உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ‛விசில் சத்தம் கேட்கக்கூடாது: தி.மு.க., கவுன்சிலர் அட்ராசிட்டி

‛விசில் சத்தம் கேட்கக்கூடாது: தி.மு.க., கவுன்சிலர் அட்ராசிட்டி

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள், 'விசில்' ஊதி குப்பை சேகரிக்க தி.மு.க., கவுன்சிலர் தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகராட்சி, 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அயூப்கான். இவரது வார்டில் 18 தெருக்கள் உள்ளன. இங்கு நகராட்சி துாய்மை பணியாளர்கள் இருவர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வீடுகளில் குப்பை சேகரிக்கும் போது, இவர்கள் வந்துள்ளதை 'விசில்' ஊதி மக்களுக்கு தெரியப்படுத்துவர். நேற்று குப்பை சேகரிக்க வந்த துாய்மை பணியாளர்களிடம், அயூப்கான், 'இனிமேல் எங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்கக்கூடாது' என்றுகூறி, அவர்கள் பயன்படுத்திய விசிலை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு, ஸ்பீக்கருடன் கூடிய கை 'மைக்'கை வழங்கிவிட்டு, 'இனிமேல் விசில் ஊதக்கூடாது; மைக் பயன்படுத்தி தான் குப்பைகளை சேகரிக்க வேண்டும்' என, கண்டிப்புடன் கூறினார். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

இந்து.
பிப் 11, 2026 17:13

நெற்கதிர் சின்னம் ஒரு கட்சி பெற்றுவிட்டால் இவர் சோறே தின்னாமல் இருப்பாரா? தீயசக்திகளுத்தான் எத்தனை அறிவு.அடேங்கப்பா.திராவிடமே பாராட்டுது.


ஸ்ரீ
பிப் 11, 2026 08:09

கூமுட்டை கவுன்சிலர்


சமீபத்திய செய்தி