உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பூரண மதுவிலக்கு தான் தீர்வு!

பூரண மதுவிலக்கு தான் தீர்வு!

அ.சேகர், கடலுாரில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பொதுவாக, எந்தவொருஅரசியல் கட்சியும், ஒரு கூட்டணியில் இருக்கும் போது, அணிக்கு தலைமையேற்று நடத்தும் பெரிய கட்சிக்கு எதிராக பேசுவது கிடையாது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,'என் வழி தனி வழி' என்று, அவ்வப்போதுதி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்குவது இல்லை. அந்த வகையில், தற்போது காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ல், மது ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக கூறியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் துணிச்சலாக,'இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம், அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம்' என்று அழைத்துள்ளது, உண்மையில் ஆளும் தி.மு.க.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.ஏனெனில், மது வருவாய் வாயிலாகதான், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதை நன்றாக அறிந்து இருந்தும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று திருமாவளவன் கூறுவதை எப்படி தி.மு.க., ஏற்றுக் கொள்ளும்? 'கள்ளச்சாராயம் பெருகி விடும் என்று காரணம் கூறி, அரசே மது விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது'என்று திருமாவளவன் கூறுவது சரியே. பூரண மதுவிலக்கு என்பது தான் உண்மையான தீர்வாகும்.திருமாவளவன், அரசியல் பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.திருமாவளவன் கூறுவது போன்று தேர்தல் அரசியல் வேறு, மற்ற நேரங்களில் செய்யும் அரசியல் வேறு என்பதை உணர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் சுய கவுரவம் பார்க்காமல், திருமாவளவன் அழைப்பை ஏற்று, மக்களின் நலனுக்காக போராட வேண்டும். மேலும், திருமாவளவன், 'நம் கட்சியில்உள்ள யாரும் மது அருந்தக் கூடாது; எந்தவொரு போதை பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. அதையும் மீறி, யாராவது குடித்தால் அவர்களது கட்சி பதவியை பறித்து விடுவேன்' என்று கூறினால், அதுவும் பாராட்டப்படும்.திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு, மிகப்பெரிய அளவில்வெற்றி பெற வேண்டும் என்பதே நடுநிலையான தமிழர்களின் ஆசை! 

மும்மொழி கொள்கையே சிறந்தது!

எஸ்.கிருஷ்ணன், சின்னவேடம்பட்டி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பிரான்ஸ் நாட்டின் பாரிசில், 17 நாட்கள் நடைபெற்ற உலக ஒலிம்பிக்போட்டி, ஆக., 11ல் கோலாகலமாக நிறைவு பெற்றது.நம் வீரர் - வீராங்கனையரும் போட்டியில் பங்கேற்று, தம் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்திய மண்ணின் பெருமையை பறை சாற்றினர். கத்துக் குட்டியான நாம் பல போட்டிகளில் பங்கேற்றாலும், 5 - 7 வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது.உலக வளர்ச்சி போட்டியில் ஜாம்பவானாக ஆஸ்திரேலியா, பெல்ஜியம்,ஸ்பெயின், அர்ஜென்டினாமற்றும் பிரிட்டன் போன்ற திறமைமிக்க அணிகளுடன்போட்டி போட்டு, வெற்றிக் கொடியை நம்மால் நாட்ட முடிந்தது.மயிரிழையில், பல போட்டிகளில் தங்கம்,வெள்ளி பதக்கத்தை இழந்தோம். இதில் நம் பலவீனம்என்னவென்றால், நமக்குதெரிந்த தாய்மொழியில்தான், விளையாட்டை நடத்தி செல்லும் நடுவரிடம்,பேச வேண்டியுள்ளது. நாம் பேசும் மொழி, அவருக்கு புரியவில்லை; அவர் பேசும் ஆங்கிலம் நமக்கு தெரியவில்லை.உதாரணமாக, ஹாக்கி போட்டியில் பந்து காலில் படாமல் ஹாக்கி மட்டையில் பட்டிருந்தாலும்கூட, 'பெனால்டி கார்னர்' என்று கூறி, கையை உயர்த்துவர் எதிர் அணியினர்; இதற்கு மறுப்பு தெரிவிக்காமலும், மேல்முறையீடும் செய்யாமலும்நம்மவர்கள் அமைதி காத்தனர்.ஆங்கிலம் தெரியாத நம் வீரர்கள், நம் பாயின்டை தெளிவாக கூறாமல் ஒதுங்கியே இருப்பர்; இதுஎதிர் அணியினருக்கு சாதகமாய் அமைந்து விடுகிறது.நம் வீரர்கள், ஒருமுறையாவது தங்கள் உண்மையான, 'மூவ்மென்டை' நடுவரிடம் தெரிவித்ததேயில்லை. இது நமக்கு, வெற்றியின் தடைக்கல்லாக இருந்தது.சில சமயம் எதிர் அணியினரின் தவறான ஆட்டத்திற்கு, 'பெனால்டி கார்னர்'என்று நடுவர் அறிவித்த பின்னரே, நம்மவர்கையை துாக்கியதெல்லாம் நடந்திருக்கிறது.எனவே உலக விளையாட்டு அரங்கில் பங்கேற்கும் வீரர்கள்அனைவருக்கும்,ஓரளவிற்காவது ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்.நம் தாய்மொழியான தமிழை படித்தால், சென்னை வரை சுதந்திரமாக சென்று வரலாம்; அடுத்த மாநில எல்லையில் காலடி வைத்தால், இரு மொழி தெரிந்திருக்க வேண்டும். தேசிய, சர்வதேச அளவில் பயணம் செய்தால், உலக பொது மொழியான, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.ஒரு மொழியை மட்டும்தெரிந்தவன், ஓர் ஹோட்டலுக்கு சென்றால், அவன் விரும்பும் சைவ சாப்பாடு இல்லையெனில், பட்டினியாக தான் செல்ல வேண்டும். இரு மொழி தெரிந்தால், தனக்கு உகந்த அசைவ உணவைச் சாப்பிட்டுச் செல்லலாம்.மும்மொழி தெரிந்தவன்எங்கு சென்றாலும் அவனுக்குரிய மேல் நாட்டு சாப்பாடு எளிதாக கிடைக்கும்; உண்டபின் உல்லாசமாய் பயணம் செய்வான்.எனவே நம் நாட்டின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்களுக்கு மும்மொழி கொள்ளையே சிறந்தது!

மக்கள் அனைவருமே தி.மு.க.,வில் சேரணுமோ?

வி.பத்ரி, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ--மெயில்' கடிதம்: --------------------------------------------------------------------தி.மு.க., பவள விழாவை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவரும், வீடுதோறும் தி.மு.க., கொடியை ஏற்ற வேண்டுமாம்; அமெரிக்காவிலிருந்து அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது!கடந்த மாதம், சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றும்படி, முதல்வர்என்கிற முறையில் ஒரு வேண்டுகோள் கூட விடுக்கவில்லை. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளையும், முதல்வர் பொருட்படுத்தவில்லை. இதிலிருந்தே,தி.மு.க.,வின் தேசபக்தி குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.கருணாநிதி நாணய வெளியீட்டு விழாநிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, தேசிய கீதம் பாடப்பட்டபோது, சீனியர் அமைச்சர் துரைமுருகன் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, அங்கும் இங்கும் பராக்கு பார்த்தபடி இருந்தது, தி.மு.க.,வின் தேச பக்திக்கு இன்னொரு உதாரணம்.தேசிய கீதம், வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் ஆகிய மூன்றும், தி.மு.க., விற்குப் பிடிக்காத தேசிய விஷயங்கள்.போகட்டும்... தி.மு.க., பவள விழாவிற்கு கட்சிக்கொடியை இல்லந்தோறும் ஏற்றச் சொல்லி தன் சொந்தக் கட்சியினருக்குத் தானே கட்டளையிட வேண்டும்? எப்படிபொதுமக்களுக்கு கட்டளையிடலாம்?போகிற போக்கைப் பார்த்தால், தமிழக மக்கள்அனைவரையும், தி.மு.க., வில் சேரச் சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

T.sthivinayagam
செப் 14, 2024 19:20

பாஜக கூட்டனி ஆட்சி செய்யும் புதுச்சேரியில் கள்ளுகடை சாராயக்கடை பிராந்திகடை உள்ளது தமிழகத்தில் மது ஒழிப்பு பற்றி பேச பாஜகவிற்கு என்ன யோக்கியதை இருக்கு என மக்கள் கூறுகின்றனர்


D.Ambujavalli
செப் 14, 2024 19:00

இவர் கூப்பிட்டார் என்று எந்தக்கட்சி இணையும்? ஒருவேளை இவருக்கு மது ஆலைகள் இருந்திருந்தால் இந்த அறிக்கையே விட்டிருக்க மாட்டார்


Narasimhan
செப் 14, 2024 11:15

மூன்று வருடம் கொத்து பரோட்டா தின்றுகொண்டிருந்தாயா?


ponssasi
செப் 14, 2024 09:24

மது ஒழிப்பு மாநாடு ஒரு தொழிலாகிவிட்டது. இனி மதுவை தடுக்கமுடியாது காட்டாறு வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. உண்மையாகவே திருமா அவர்களுக்கு மது ஒழிப்புமீது அக்கறை இருக்குமானால் அரசியலை கடந்து ஒரு அறிவிப்பை வெளியிடலாம் அது ஒன்று போதும் திருமா பக்கம் நடுநிலையானவர்கள் பெண்கள் வருவார்கள். இனி மதுபான ஆலை நடத்துபவர்களுக்கு விசிக தொண்டர்கள் வாக்காளிக்கமாட்டார்கள், இனி அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுக்கும் எந்த நிதி அல்லது அன்பளிப்பு போன்றவற்றை விசிக ஏற்காது என அறிவிக்க தைரியமுண்டா?


Kanns
செப் 14, 2024 09:09

Casteist Liar Goondas Surviving due to Support of Ruling Parties & Police incl Murders of Armstrong etc etc


DINAGARAN S
செப் 14, 2024 06:46

இது ஒரு அரசியல் நாடகம் என்று அனைவர்க்கும் தெரியும் இவர் மகாநாடு நடத்துவதால் டாஸ்மாக் மூட படுமா இல்லை சாராயம் விற்பனை குறையுமா. மக்கள் தானாக மாறும் வரை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. மாற்றம் ஒன்றே இன்றைய தேவை.


nagendhiran
செப் 14, 2024 06:13

மதுவிளக்கு திமுக ஆட்சியில் நடக்காதுனு உங்களுக்கும் தெரியும்? எங்களுக்கும் தெரியும்? எதற்கு இந்த அரசியல்?


முக்கிய வீடியோ