வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இடித்த கோயில்களை எத்தனை. அதை பற்றி ஏன் பேசவில்லை. குடமுழுக்கு செய்தது யார் உபாயத்தார் அரசை அரசனால் கோயில் பணத்திலா /மற்ற வரி வருமானத்திலா .கொள்ளை அடிக்கப்பட்ட கோயில் பணம் சொத்து எவ்வளவு கணக்கு உண்டா
எஸ்.கிருஷ்ணன், சின்னவேடம்பட்டி, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஞ்சாப் மாநிலம், குருகாசி பல்கலைக்கழகத்தில், பல்கலைகளுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அழகப்பா, பெரியார் மற்றும் அன்னை தெரசா பல்கலைகளின் சார்பில், மூன்று அணிகள் பங்கேற்றன. இதில், அன்னை தெரசா மற்றும் பீஹார் மாநிலம் தர்பாங்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஒரு பாயின்ட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. பீஹார் அணியினர், நம் பயிற்சியாளரை தாக்கிய சம்பவங்களும், நாற்காலிகளை வீசி, நம் வீராங்கனையரை தள்ளியதும், அனைத்து சமூக வலைதளங்களிலும், செய்தித்தாளிலும் இடம் பெற்றது.நம் பக்கம் ஆதரவு தெரிவிக்க, பஞ்சாப் அணியினர் உட்பட யாரும் முன்வரவில்லை. காரணம், அவர்களுக்கு விளக்கம் சொல்ல நம் வீராங்கனையருக்கு ஹிந்தி தெரியாது. அதனால், நம் பலத்தை நிரூபிக்க முடியவில்லை; நம் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. நிரபராதிகளாய் இருந்தும், குற்ற கூண்டில் தள்ளப்பட்டோம்.அதனால், இனியும் திராவிட மாடல் அரசு, ஹிந்தி மொழிக்கு எதிராக போர்க்கொடி துாக்காமல், நிதர்சனத்தை புரிந்துகொள்ள வேண்டும். அன்னிய மொழியான ஆங்கிலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியை ஹிந்திக்கு கொடுத்தாலே போதும்; தமிழர்கள், அனைத்து துறைகளிலும் மிளிர்ந்து, தமிழகத்தின் பெருமையை பறைசாற்றுவர்! யாரை ஏமாற்ற இந்த நடிப்பு?
எஸ்.பி.குமார்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வர்
ஸ்டாலின் மற்றும் நடிகர் சத்யராஜ் தொலைக்காட்சிகளில் தங்கள் திருமுகத்தை
மாறி மாறி காட்டி, போதையில்லா தமிழகத்தை உருவாக்க, மக்களை வேண்டி,
விரும்பிக் கேட்டுக் கொண்டுள்ளனர். எனக்கு ஒன்று மட்டும்
புரியவில்லை... அரசே மதுக்கடைகளை நடத்துமாம்... பின், அதே அரசு, 'போதைக்கு
அடிமை யாக வேண்டாம்; நேர் பாதை யில் போங்க' என்று கெஞ்சிக் கேட்டுக்
கொள்ளுமாம்.யாரை ஏமாற்ற இந்த நடிப்பு?தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டியது தானே...ஒருபுறம் டாஸ்மாக் விற்பனையை அதிகரித்துக் கொண்டே, மறுபுறம் எதற்காக இந்த போலி உருக்கம்?இதனால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? 'ஐயோ...
முதல்வர் சொல்லி விட்டார்... இனி நாம் மது அருந்தக் கூடாது' என்று,
'குடி'மகன்கள் எல்லாம் டாஸ்மாக் கடையை புறக்கணித்து விடப் போகின்றனரா?கட்டிய
மனைவி கண்ணீர் விட்டு, 'மது அருந்தாதே' என்று கதறினாலும் கண்டுகொள்ளாத
'குடி'மகன்கள், தொலைக்காட்சியில் சில வினாடிகளில் வந்து அறிவுரை கூறியதும்,
கேட்டுவிடப் போகின்றனரா என்ன? பொண்டாட்டி தாலியை விற்றாவது குடிக்க வேண்டும் என எண்ணும் அளவுக்கு, போதைமிகு தமிழகமாக மாற்றிவிட்டு, யாருக்காக இந்த வேண்டுகோள்?'குடி'மகன்கள்
கொடுக்கும் காசால், அரசு கஜானாவை நிரப்பியபடி, 'போதை வேண்டாம் மக்களே'
என்று அறிவுரை கூறுவது, கசாப்பு கடைக்காரன், 'கறி சாப்பிடாதீங்க... ஆடு
பாவம்' என்று கெஞ்சுவது போல் உள்ளது! இதற்காக முதல்வரை பாராட்டலாமே!
வ.ப.நாராயணன்,
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: ------------------------------------------------சமீபத்தில்,
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோவில்
புனரமைக்கப்பட்டு, புத்தம் புதிதாக காட்சியளித்ததைக் கண்டு பிரமித்துப்
போனேன்.சில ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலுக்கு சென்றிருந்த போது,
ஆலயத்தின் பல பகுதிகள் சிதிலமடைந்தும், கோபுரம் பொலிவிழந்தும் காணப்பட்டது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தல
மையப்பகுதியில் அமைந்திருந்தும், எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய, தி.மு.க., அரசு, இக்கோவிலை அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகமும் செய்துள்ளது.இக்கோவில்
மட்டுமல்லாது, கடந்த மூன்றாண்டுகளில், 38 பழமையான கோவில்கள் புனரமைக்கப்
பட்டுள்ளதாக, சில நாட் களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில் செய்தி
வெளிவந்திருந்தது. தமிழக அரசு ஆயிரமாண்டு பழமையான கோவில்களை
புதுப்பிக்கும் திட்டத்தை, 2022ல் துவக்கி, அதற்காக ஆண்டுக்கு, 100 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கியதையும், தொல்லியல் துறை உதவியுடன், 714 பழமையான
கோவில்களை கணடறிந்து, ஒவ்வொன்றாக புனரமைப்பு பணிகளை செய்து வருவதையும்,
'தினமலர்' பத்திரிகை வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் எழுதிய செய்திக் கட்டுரை
யிலும் படித்தேன். அதேபோல், தஞ்சை மாவட்டம் துக்காச்சியில் உள்ள,
1,300 ஆண்டு பழமையான ஆபத்சகாயேஸ்வரர் கோவில் தொன்மை மாறாமல்
புதுப்பிக்கப்பட்டதும், அக்கோவில், 2024ல் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு
செய்யப் பட்ட செய்தியையும், 'தினமலர்' இதழில் படித்தேன்.முதல்வருக்கு
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டா லும், பழமையான ஹிந்து கோவில்களை
புனரமைப்பதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, அறநிலையத்துறை வாயிலாக, ஆலயத்
திருப்பணி செய்து வருவது, கடவுள் நம்பிக்கையுள்ள ஹிந்துக்களை
மகிழ்ச்சிஅடையச் செய்துள்ளது.இதற்காக, முதல்வரையும், அறநிலையத்துறை அமைச்சரையும் தாராளமாக பாராட்டலாம்! காமெடி செய்யாதீர் கள் ராகுல்!
ரா.சேதுராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:------------------- ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரை மோடி அரசு கண்டுகொள்வதில்லை; குறிப்பிட்ட சில பெரு முதலாளிகளை வளப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, ஏழைகளுக்கு நீதியும், உரிமைகளும் கிடைக்க, 'வெள்ளை டி - -ஷர்ட் இயக்கம்' துவங்கியுள்ளதாக கூறியுள்ளார், காங்., எதிர்க்கட்சி தலைவர் ராகுல்.மற்ற அரசியல்வாதிகளைப்போல ராகுல் வேட்டி - -சட்டை அணிவது இல்லை; டி- - ஷர்ட், பேன்ட் தான் அணிகிறார். அதுவும், வெள்ளை டி - -ஷர்ட் அவருக்கு மிகவும் பிடித்தமானது போல! பொதுவாக, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை செய்வோரை, 'புளு காலர்' என்றும், உடல் உழைப்பின்றி வேலை செய்வோரை, 'ஒயிட் காலர்' என்றும் அழைப்பர்.ராகுல் துவங்கி இருக்கும் இயக்கம், உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவானது என, அவரே கூறியுள்ளார்.அப்படிப் பார்த்தால், உழைக்கும் வர்க்கத்திற்கு ஆதரவாக, 'புளு காலர் டி- - ஷர்ட் இயக்கம்' தானே துவங்கி இருக்க வேண்டும்? ஏன் வெள்ளை டி- - ஷர்ட் இயக்கம்?ராகுலும், அவரது சகோதரியும் இப்படி ஏதாவது காமெடி செய்து, தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதை விட, தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு உருப்படியாக ஏதாவது நலத் திட்டங்களை செய்யலாம்!
இடித்த கோயில்களை எத்தனை. அதை பற்றி ஏன் பேசவில்லை. குடமுழுக்கு செய்தது யார் உபாயத்தார் அரசை அரசனால் கோயில் பணத்திலா /மற்ற வரி வருமானத்திலா .கொள்ளை அடிக்கப்பட்ட கோயில் பணம் சொத்து எவ்வளவு கணக்கு உண்டா