உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சில நேரங்களில், சில சம்பவங்கள்!

சில நேரங்களில், சில சம்பவங்கள்!

சில நேரங்களில், சில சம்பவங்கள்!

எஸ்.சீனிவாசுலு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இரு தினங்களுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்துாரிக்கு எதிராக, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில், சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரை ஆதாரமாக வைத்து, கலவரத்தை துாண்டுதல், தவறான கருத்துகளை பரப்புதல் உட்பட நான்கு பிரிவுகளின்கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் சிலரால் நடக்கும் சில சம்பவங்கள்,சிலரில் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்து விடக்கூடிய வல்லமை வாய்ந்தவை.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்...அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவை கொள்கைபரப்பு செயலராக அறிவித்தார் எம்.ஜி.ஆர்., அதோடு ராஜ்யசபா எம்.பி.,யாகவும் ஆக்கினார்.அவரும் அவருக்கு கிடைத்த பதவிகளுடன், அமைதியாகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார்.எம்.ஜி.ஆர்., மரணமடைந்து, அவரது பூதவுடல், சென்னை ராஜாஜி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது தலைமாட்டிலேயே சோகமாக அமர்ந்துகொண்டிருந்தார் ஜெயலலிதா.எம்.ஜி.ஆரின் பூதவுடல், பீரங்கி வண்டியில்ஏற்றப்பட்டபோது, அந்த வண்டியில் தானும்ஏறிவிட்டார்.அவரை அப்படியே விட்டிருந்தால், இறுதிவரை அமைதியாக இருந்து, அடுத்த வேலையை பார்க்கப் போயிருப்பார்; அதாவது, தன் நடிப்புத் தொழிலில் ஆர்வம் காட்டி இருந்திருப்பார்... அங்கேதான் விதி தன் வேலையைக் காட்டியது!ஜெயலலிதாவை, அனகாபுத்துார் ராமலிங்கம்என்பவர் அந்த பீரங்கி வண்டியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.அதன் விளைவு?ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆர்வம் அதிகமாகி, திருநாவுக்கரசர் போன்ற சிலரின் துணையோடு, கட்சியையும் கைப்பற்றி, ஆட்சியிலும் அமர்ந்து கோலோச்சினார்.நிற்க...சமீபத்தில் அர்ஜுன் சம்பத் கூட்டிய கூட்டத்தில், நடிகை கஸ்துாரி பேசிய பேச்சு, பெரிதாக கண்டுகொள்ளப்பட வேண்டாத விஷயம்.திராவிடக் கட்சியினர் எப்போதுமே ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி, ஊதி ஊதி பெரிதாக்குவரே... அதன்படி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் என்ற அமைப்பின் சார்பில், நடிகை கஸ்துாரி மீது போலீசில் புகார் கொடுக்க வைத்து, வழக்கும்பதிவு செய்யப்பட்டுள்ளது.கஸ்துாரியின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்ததுமே, தனக்கு அரசியல் ஆசை துளிர்விட்டு விட்டதாக தெரிவித்தும் விட்டார்.அனகாபுத்துார் ராமலிங்கம், ஜெயலலிதாவை கீழே தள்ளி, அவரது அரசியல்வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தது போல, இந்த அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தார், கஸ்துாரியின்அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கின்றனர் போலும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

VSMani
டிச 15, 2024 14:18

வருங்கால முதலமைச்சர் கஸ்தூரி ?


sankaran
நவ 14, 2024 16:34

நான் இப்போ கஸ்துரியின் fan ... என் ஒட்டு கஸ்துரிக்கே ...


Kennedy
நவ 13, 2024 11:56

Nothing will happen long as people vote for money and freebies


Anantharaman Srinivasan
நவ 09, 2024 23:09

எஸ்.சீனிவாசுலு, நடிகை கஸ்தூரியும் நடிகை ஜெயலலிதாவுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உன்னது. கஸ்தூரி சட்டசபை தேர்தலில் நின்றால் டிபாசிட் கூட தேறாது.


Alagu saravana Raj
நவ 09, 2024 21:37

கஸ்துரி என்றைக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு சமமாக வர முடியாது


D.Ambujavalli
நவ 09, 2024 18:26

மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் மூலதனம் ‘தமிழகம் இளம் விதவைகளின் மாநிலமாகிவிட்டது என் அண்ணனின் முதல் கையெழுத்தே மதுவிலக்குதான் ‘ என்று பிரசாரத்தில் முழங்கிவிட்டு, ‘நானா சொன்னேன் , இருக்காது ‘ என்று மாற்றிப்பேசும் குணம் உள்ளவரை ஜெயித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று கிடைக்கும் 200 க்கு வோட்டுப்போடுவோம் என்பதுதான் மக்கள் கொள்கை.


MANIMARAN R
நவ 09, 2024 14:48

கஸ்தூரிக்கு ராஜ்ய சபா பதவி வழங்க பி ஜே பி பரிசீலித்து வருகிறது ? இது நல்லா இருக்கு இல்லையா


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2024 08:37

திமுகவின் கொள்கைப்படி ஜெயலலிதா மீது செருப்பு வீசித் தாக்கியது அனகாபுத்தூர்இராமலிங்கம் கிடையாது. இவர் வேறு இராமலிங்கம். இவர் இப்போது திமுகவில் இருந்து விலகி விட்டார் என்றே நினைக்கிறேன். இவருக்கு திமுகவில் சிறப்பு பதவிகளும் வழங்கப்பட்டதாக நினவு.


Anantharaman Srinivasan
நவ 09, 2024 23:21

KKSSR இன்னிக்கு திமுகலில் மந்திரி.


chennai sivakumar
நவ 09, 2024 05:41

ஒரு வியாபாரி வீடு வாங்க ஹாட் கேஷ் கொண்டு சென்று விற்பவரிடம் விலையை குறைக்க சொன்னார். விற்பவர் ஒரு குறிப்பிட்ட விலைக்கு குறைவாக விற்க முடியாது என்றார். உடனே வியாபாரி பெட்டியை திறந்து ஹாட் கேஷ் இருக்கு. வசதி எப்படி என்றவுடன் விற்பவர் மயங்கி ஓகே சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. மக்கள் இலவச அறிவிப்புகளை கேட்டவுடன் மகுடி கேட்டு மயங்கிய நாகம் போல ஓட்டளிக்கின்றனர். இந்த லட்சணத்தில் அறிவுபூர்வமாக சிந்தித்து இங்கே செயல் படுவர். அவ்வாறு செயல் படுவோர் எல்லாம் அயல் நாட்டிற்க்கு சென்று விட்டனர் என்பது தெரிந்த விஷயம். தயவு செய்து கனவு கான வேண்டாம். ராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன என்ற மனதுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு விட்டோம். மீளுவது ஒரு பெரிய கேள்விக்குறியே