உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தேர்தல் நிதியின் சீக்ரெட்!

தேர்தல் நிதியின் சீக்ரெட்!

ஜி.கே. இனியன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் நிதி திரட்ட, தி.மு.க., முடிவு செய்துள்ளதை அறிந்து, வட்டம் முதல், மாவட்டச் செயலர் வரை குஷியில் உள்ளனர். ஆளும்கட்சி தேர்தல் நிதி வசூலிக்கிறது என்றால், 10, 20 ரூபாய் என்று வீடுவீடாக சென்றா வசூல் செய்வர்... அரசு ஒப்பந்தம்பெற்றோர், பெரும் தொழிலதிபர்கள், பெரியநிறுவனங்களிடம் இருந்து தான் தங்கள்வசூல் வேட்டையை ஆரம்பிப்பர். 1,000ரூபாய் பெற்று, 500 ரூபாய்க்கு ரசீது கொடுப்பர்; மீதியை ஆட்டையைப் போடுவர். யார் கேட்கப் போகின்றனர்?இப்போதே, நகராட்சி, மாநகராட்சிகளில்கட்சி நிதி என்று சிறிதும் வெட்கமின்றி வசூலிக்கின்றனர். இனி, கேட்கவா வேண்டும்? நிர்வாகிகள் காட்டில் பண மழை தான்!'தேர்தல் நிதி தாரீர் தாரீர்... பட்டியல் இதோ பாரீர் பாரீர்...' என்று கட்சிப் பத்திரிகையில் வெளியிட்டு, தொண்டர்களையும், தேர்தல் ஆணையத்தையும் நம்ப வைத்து விட்டால், சட்டசபைத் தேர்தல் செலவு செய்ய வசதியாக இருக்கும்.தேர்தல் நிதி என்பதே, இதுவரை சேர்த்து வைத்துள்ள கருப்பு பணத்தை, தேர்தல் நிதி என்ற பெயரில் வெள்ளை ஆக்குவதுதான் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன? பார்லிமென்ட் தேர்தலில், ஓர் ஓட்டுக்கு,500 ரூபாய் வழங்கினர்; இனி, சட்டசபை தேர்தலுக்கு, 1,000 ரூபாய் தாராளமாக தருவர். இன்றைய நிலையில், ஆளும் தி.மு.க., அரசு, தன் கூட்டணி கட்சிகளைத் தக்கவைக்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் த.வெ.க., முதலிய கட்சிகளை சமாளிக்க வேண்டும். அதனால், தொண்டர்களை குஷிபடுத்த இப்போதே, வசூல் வேட்டையை கையில் எடுத்து விட்டனர்!

யாருக்கு பதில் சொல்வர்?

அ.துரைகோபு, பண்ருட்டி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமியின் கேள்விக்கு,'தேவையற்ற கேள்விகளைஎழுப்புகிறார்; அதற்குஎல்லாம் பதில் சொல்ல முடியாது' என, அலட்சியமாகபதில் கூறியுள்ளார். தி.மு.க., அரசு, யாருடைய கேள்விக்குத் தான் பதில் சொல்லும்... எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி கேட்கக்கூடாது; ராமதாஸ் கேட்க கூடாது. அப்ப, அமெரிக்கஅதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் கேள்வி கேட்டால் தான், தி.மு.க., தலைமையும், சேகர் பாபு போன்ற அமைச்சர்களும் பதில் சொல்வரா? கேள்வி கேட்கும் இடத்தில்பழனிசாமி இருக்கிறார்; பதில் சொல்லும் இடத்தில்நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். மாநிலத்தை ஆள்வதற்குமக்கள் எப்படி உங்களுக்குவாய்ப்பளித்து உள்ளனரோ,அதுபோல, அவருக்கும் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கொடுத்துள்ளனர்.அவருடைய கேள்விக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராகஇருந்த போது, சட்டையைகிழித்துக் கொண்டு, சாலையில் நின்று ஒப்பாரி வைத்து, அரசியல் செய்யவில்லையா? ஒரு எதிர்க்கட்சி தலைவராக, 'தமிழகத்தில்சட்டம் - ஒழுங்கு சரியில்லை; ரவுடியிசம் பெருகிவிட்டது; தினம் கொலைகளும், பாலியல் சீண்டல்களும் அதிகமாகி விட்டது. கனிம வளங்கள் பெருமளவில் கொள்ளை அடிக்கப்படுகிறது; அதில்வரும் வருமானம் அரசு கஜானாவிற்கு செல்வதில்லை. 'இருமுறை முதலீடுகளைஈர்க்க சென்ற முதல்வர், இதுவரை எவ்வளவு முதலீடுகளை கொண்டு வந்துஉள்ளார், எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதுஎன்ற விபரத்தைச் சொல்லவில்லை' என்று தமிழகத்தின்தற்போதைய நிலவரத்தைத்தானே சொல்கிறார்? ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் பழனிசாமிக்கு, நன்றி சொல்ல வேண்டுமே தவிர, உதாசினமாக பதில் சொல்லக் கூடாது. 'இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' - இடித்துச் சொல்லி திருத்துவர் இல்லாத மன்னன், தன்னை கெடுக்க யாரும் இல்லை என்றாலும், தானே கெட்டுப் போவான் என்பதையும் மனதில் வையுங்கள்!

எல்லாம் நடிப்பா விஜய்?

கே.ரங்கராஜன், சென்னையில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: விக்கிரவாண்டி மாநாட்டில்,'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்லி, ஜாதி, மதம், உயர்ந்தவர், தாழ்ந்தவர்,சமுக நீதி, மத நல்லிணக் கம் என்று தனக்கு தெரிந்த வார்த்தைகளை எல்லாம் அடுக்கி, மேடையில் வீர வசனம் பேசியவர், த.வெ.க.,தலைவர் நடிகர் விஜய். இவர் தான், தற்போது, தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பாடப்பட்ட, இசைவாணியின், 'ஐ ஆம் சாரி ஐயப்பா...' என்ற பாடலுக்கு, எந்த வித கண்டனமும் தெரிவிக்காமல்மவுனமாக இருக்கிறார். என்னவாயிற்று விஜய் உங்கள் மத நல்லிணக்கம்?ஒருவேளை, சிறுபான்மை ஓட்டு, உங்களைபதம் பார்த்து விடும் என்றுவாயிற்கு பூட்டுப் போட்டுவிட்டீர்களா அல்லது சம்பந்தப்பட்டவர் நீங்கள் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்என்ற பாசமா? மேடையில் பகவத்கீதை, பைபிள், குர்ஆன் என்று மூன்று புத்தகங்களையும் துாக்கிக் கொண்டது, வெறும் பம்மாத்துகாட்டவா... 'நான் அனைவருக்கும் பொதுவானவன்' என்று சொல்லும் விதமாகத் தானே, மூன்று புனித நுால்களையும் கையில் வைத்திருந்தீர்கள்? பின்னர் ஏன் வாயை திறக்காமல் மவுனம் காக்கிறீர்கள்?எல்லாம் நடிப்பா விஜய்? 

பழனிசாமிக்கு புரியுமா?

வா.தியாகராஜன், கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., சார்பில், ஜானகி ராமச்சந்திரனின் நுாற்றாண்டு விழா சமீபத்தில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கிய நடிகர் ரஜினி, 'ஒரு முடிவு எடுக்கும்போது, உனக்கு மட்டும் சந்தோஷம் தருகிறதா, அம்முடிவால்மற்றவருக்கும் சந்தோஷம் கிடைக்குமா என சிந்தித்து,உனக்கு மட்டும் என்றால்,அந்த முடிவை எடுக்க வேண்டாம்.'மற்றவர்களுக்கும்சந்தோஷம் தரும் என்றால், உடனே அந்த முடிவை எடுத்து விடு' என்று ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரையை மேற்கோள்காட்டியும், தன் கணவர்உருவாக்கிய, அ.தி.மு.க.,அழிந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், சுயநலம்பாராமல் ஜானகி எப்படி ஜெயலலிதாவிற்கு விட்டு கொடுத்தார் என்பதையும் பேசினார்.அவர் பேசியது யாருக்குபுரிந்ததோ இல்லையோ... பழனிசாமிக்கு புரிய வேண்டும்.தன் சுயநலம், பதவி, ஆசைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, பிரிந்து சென்ற, பன்னீர் செல்வத்தை மட்டும் சேர்த்து, பா.ஜ., கூட்டணியின் பலத்துடன் வரும் சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டால் மட்டுமே,அ.தி.மு.க., வெல்ல முடியும். இது, என் போன்ற லட்சக்கணக்கானஅடிமட்ட அ.தி.மு.க., தொண்டர்களின் கருத்து. இதை அவர் உதாசீனப்படுத்தினால், பழனிசாமியின்முதல்வர் கனவு, கானல் நீராகத் தான் போகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
டிச 03, 2024 22:32

பழனிசாமியை தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் தான் பிரிந்த அதிமுக ஒன்று சேரமுடியும்.


Barakat Ali
டிச 03, 2024 08:59

கல்பாக்கம் தியாகராஜன் சரியாகச்சொன்னார்.. அதிமுக அனுதாபிகளான பலருக்கும் அவர் வண்ணத்தில் மாற்றுக்கருத்து இருக்காது ......


சமீபத்திய செய்தி