உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஜூலை 29, 1936கோவை மாவட்டம், ஆத்துப்பொள்ளாச்சியில், பொன்னுசாமி - கண்டியம்மாள் தம்பதியின் மகனாக, 1936ல், இதே நாளில் பிறந்தவர், 'சிற்பி' பாலசுப்பிரமணியம்.இவர், கேரள மாநிலம் பாலக்காடு, நல்லேபள்ளியில், மலையாள வழியில் படித்தார். திருச்சி கல்லுாரியில், பி.யூ.சி., சேர்ந்தார். அங்கு தமிழாசிரியர் அப்துல் கபூரால், தமிழ் மொழி மீது பற்றாகி, பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில் தமிழ் படித்து, பாரதியார் பல்கலை பேராசிரியரானார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, போலீஸ் அதிகாரிகள் சிவானந்தம், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இவரின் மாணவர்கள். இலக்கணம் அறிந்த இவர், முதலில், மரபு கவிதைகளையும், பின், புதுக்கவிதைகளையும் எழுதினார். கட்டுரை, ஆய்வு நுால்களையும் எழுதியுள்ளார்.சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர், 'சாகித்ய அகாடமி'யின், தமிழ் அறிவுறைஞர் குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசு, சாகித்ய அகாடமி விருது, 'பத்மஸ்ரீ' விருது உள்ளிட்டவற்றை இவர் பெற்றுஉள்ளார். இவரின், 88வது பிறந்த தினம் இன்று!அறக்கட்டளையால், படைப்பாளர்களுக்கு விருதளித்து, 'சிற்பிகளை செதுக்கும் சிற்பி' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை