இதே நாளில் அன்று
அக்டோபர் 12, 1918சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில், அண்ணாமலை செட்டியாரின் மகனாக, 1918ல் இதே நாளில் பிறந்தவர் சிதம்பரம். இவர், சென்னை கிறிஸ்துவப் பள்ளியில் படித்தார். குடும்ப பெரியோரிடம் வர்த்தகப் பயிற்சி பெற்று, தன் 20வது வயதில், மும்பையில் ஒரு ஸ்கூட்டர் தொழிற்சாலையை துவங்கினார்.தொடர்ந்து, அலுமினிய தொழிற்சாலையின் இயக்குனரானார். தமிழகத்தில், 'ஸ்பிக்' உரத் தொழிற்சாலையை துவக்கினார். 1955ல் சென்னை மேயராக தேர்வானார். தென்னிந்திய வர்த்தக, தொழில் துறையின் தலைவராகவும் தேர்வானார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைத் தலைவராக தேர்வாகி, தலைவராக உயர்ந்ததுடன், 20 ஆண்டுகள் பொருளாளராகவும் இருந்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 32 ஆண்டுகள் இருந்த இவர், சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட உதவினார். தன் 81வது வயதில், 2000, ஜனவரி 19ல் காலமானார். சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பெயரால் நினைவுகூரப்படும் தொழிலதிபர் பிறந்த தினம் இன்று!