உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

டிசம்பர் 7, 1926திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கணியூரில்,அருணாசலம் என்பவரது மகனாக, 1926ல் இதே நாளில் பிறந்தவர் சோமசுந்தரம் எனும் கே.ஏ.மதியழகன்.இவர், உடுமலையில் பள்ளி படிப்பையும், சிதம்பரம் அண்ணாமலைபல்கலையில் சட்ட படிப்பையும் முடித்தார். இவரது சகோதரர்களான கே.ஏ.அருணாசலம், கே.ஏ.கிருஷ்ணசாமி போல இவரும் அரசியல்வாதியாகி, பேச்சிலும், எழுத்திலும் சிறந்தவரானார்.தி.க.,வில் இருந்து அண்ணாதுரை விலகி, தி.மு.க.,வை துவக்கியபோது, அதன் நிறுவன தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1962, 1967, 1971ம் ஆண்டு தேர்தல்களில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று, தி.மு.க., அரசில் உணவு, வருவாய் மற்றும் வணிக வரி துறை அமைச்சராக இருந்தார்.அண்ணாதுரை மறைவுக்கு பின், சபாநாயகராகஇருந்த இவர் எம்.ஜி.ஆர்., ஆதரவாளராக மாறியதால், இவரை சபாநாயகர் பதவியில் இருந்து முதல்வர் கருணாநிதி நீக்கினார். பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். 1974ல் மீண்டும் தி.மு.க.,வில் இணைந்து திட்டக்குழு தலைவரானார்.தன் 57வது வயதில், 1983, ஆகஸ்ட் 17ல் மறைந்தார்.இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ