உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

டிசம்பர் 10, 1952

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், தெல்லிப்பிழை என்ற ஊரில், மகாஜனகல்லுாரியில் விலங்கியல் ஆசிரியராக இருந்த சங்கரன் மேனன் -- சரஸ்வதி தம்பதியின் மகளாக, 1952ல் இதே நாளில் பிறந்தவர் சுஜாதா எனும் விஜயலட்சுமி.இவர், 10ம் வகுப்பு வரை இலங்கையில்படித்து, 14ம் வயதில் குடும்பத்துடன் கேரளாதிரும்பினார். தபஷ்னி, போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட மலையாள படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குனர் கே.பாலசந்தர், அவள் ஒரு தொடர்கதை படத்தில் இவரை அறிமுகம் செய்தார்.அதன் வெற்றியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு படங்களில் பரபரப்பாக இயங்கினார். அன்னக்கிளி,அன்புக்கு நான் அடிமை, கடல் மீன்கள், தீர்ப்பு, விதி, அமைதிப்படை, விஸ்வரூபம், வரலாறு உள்ளிட்ட படங்களில், அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார்.எப்போதும் மென்சோகம் இழையோடும் புன்னகையோடு, திருத்தமாக வசனம் பேசி திரையில்தோன்றிய இவரது வாழ்வும் மென்சோகத்துடனேஅமைந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர், 2011, ஏப்ரல் 6ல் தன் 58வது வயதில் மறைந்தார்.ஒலிச்சித்திரமாக வீதியெங்கும் ஒலித்த, விதியின் குரலுக்கு சொந்தக்கார நடிகை பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி