உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: நவ. 3

இதே நாளில் அன்று: நவ. 3

நவம்பர் 3: மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டம், சாந்திநிகேதனில் அஷுதோஷ் சென் – அமிதா சென் தம்பதியின் மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர், அமர்த்தியா குமார் சென். தாகூரின் விஸ்வபாரதி கல்வி நிறுவனத்திலும், வங்கதேச தலைநகர் டாக்காவிலும் பள்ளி படிப்பை முடித்தவர், கொல்கட்டா பிரசிடென்சி கல் லுாரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், பிரிட்டன் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லுாரியில், 1959-ல் முனைவர் பட்டமும் பெற்றார். ஜாதவ்பூர் பல்கலையில், தன் 23-வது வயதிலேயே பொருளாதார பேராசிரியராக பணியை தொடங்கினார். டில்லி, லண்டன், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு பல்கலைகளில் பணியாற்றினார். வறுமை, பஞ்சம், உணவு பாதுகாப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூகநலம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். 1998-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும், 1999-ல் பாரத ரத்னா விருதும் பெற்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெறும் வருமானத்தின் அடிப்படையில் மதிப்பிடாமல், மக்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை தரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இவரது ஆய்வுகள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித மேம்பாட்டு அறிக்கை உருவாக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது 93வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி