உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 7

இதே நாளில் அன்று: அக். 7

அக்டோபர் 7, 1981 கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் எனும் ஊரில், முரளிதரன் – விமலா தம்பதியின் மகளாக, 1981ல் இதே நாளில் பிறந்தவர், விஜயலட்சுமி. பிறவியிலேயே பார்வைத்திறன் இல்லாத இவர், துவக்கத்தில் வீட்டிலும், தொடர்ந்து பொது பள்ளியிலும் படித்தார். சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டதால், இவரது தந்தை தினமும் அதிகாலையில் இசை பயிற்சி அளித்ததுடன், கர்நாடக இசை பிரபலங்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.ஜே.ஜேசுதாஸ், மஹாராஜபுரம் சந்தானம் போன் றோரின் பாடல்களையும் கேட்க வைத்தார். மேலும், ஒற்றைக்கம்பி வீணையை மேம்படுத்தி, மின்னணு வடிவில் வடிவமைத்து கொடுத்தார்; அதுவே பின்னர், ‘காயத்ரி வீணை’ என அழைக்கப்பட்டது. அதில் இவர் காட்டிய திறமையால், ‘ஒற்றைக்கம்பி வீணை காயத்ரி’ என பெயர் வந்தது. செல்லுலாய்டு மலையாள திரைப்படத்தில், ‘காட்டே காட்டே’ பாடலைப் பாடி பின்னணி பாடகியான இவர், தமிழிலும், ‘மண்ணிலே ஈரமுண்டு, சொப்பன சுந்தரி, காக்கா முட்டை’ உள்ளிட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்த ஆண்டு, 72வது தேசிய திரைப்பட விருதுகளில், அங்கு வான கோனிலு என்ற பாடலுக்காக, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை பெற்றார். இவரது 45வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை