உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அரசிடம் சொல்லி இருக்கணும்!

அரசிடம் சொல்லி இருக்கணும்!

திருவள்ளூர் -- தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, சென்னை, செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயணம், பெண்களுக்கு பெரிய உதவியாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த பெண், மதுரை, திண்டுக்கல், திருச்சி, உளுந்துார்பேட்டை செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக, டவுன் பஸ்களில் கட்டணமின்றி பயணித்து, சென்னை கல்லுாரியில் படிக்கும் மகளை சந்தித்தார்.'அதனால், அவருக்கு, 1,366 ரூபாய் மிச்சமானது. மீண்டும் அதே வழியில், அந்த கெட்டிக்கார பெண், மதுரை சென்றார். தயவு செய்து எல்லாரும் அவரை போல் பயணிக்காதீர்கள். போக்குவரத்து துறை போண்டியாகி விடும்' என்றார்.இதைக் கேட்ட பெண் ஒருவர், 'நல்ல அறிவுரை தான்... ஆனால், இதை தமிழக அரசிடம் தான் இவர் சொல்லி இருக்கணும்...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

DARMHAR/ D.M.Reddy
ஏப் 16, 2024 23:57

நீங்கள் சரியாக விமர்சித்திருக்கிறீர்கள் நன்றி


Public
ஏப் 13, 2024 15:43

மாவட்டத்திற்கு உள்ளே மட்டும் தான் இலவச பயணம் செய்ய முடியும் இதுல ஒரு பெண் சென்னை வரை சென்று வந்தாராம்


Jayaraman Sekar
ஏப் 10, 2024 11:30

இப்படி ஒரு பேச்சா??? இதைக் கேட்டால் சில்லறைப் பயல் சிதம்பரம்ன்னு கருணாநிதி சொன்னது சரியே என்று தோன்றுகிறது முதலில் இவ்வளவு ரூபாய் மிச்சப்படுத்தினார் என்று சொன்னாலும் எவ்வளவு நாட்கள் ஆகும் இப்படி சுற்றி வர??? கனெக்ஷன் டவுன் பஸ்கள் இருக்குமா?? அப்படியே இருப்பினும் எவ்வளவு நேரம் நாட்கள் காத்து இருக்கணும்??? திருப்பரங்குன்றம்-திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய பாமக, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விளாச்சேரியில் நடந்தது அதில் திருமங்கலம், ஆரப்பாளையத்திலிருந்து விளாச்சேரிக்கு அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த லட்சணத்தில் மதுரை திண்டுக்கல் டவுன் பஸ்ஸிலாம் பிரயாணமாம் இதில் திண்டுக்கல் திருச்சி டவுன் பஸ்ஸாம் கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருமைமாடி ஏரோப்பிளேன் ஓட்டாதா என்ன????


D.Ambujavalli
ஏப் 10, 2024 07:56

இதுவரை இந்த யுக்தி தெரியாமல் போய்விட்டதே தேங்க்ஸ் ஐயா, இனி பெண்கள் மாநிலம் முழுதும் இப்படியே பயணித்து அரசை முழு மொட்டையாக்கிவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை