உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நாங்க பம்புன்னு நினைத்தோமே!

நாங்க பம்புன்னு நினைத்தோமே!

கோவை நேரு ஸ்டேடியத்தில், பள்ளி மாணவர்களுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்க பலபள்ளிகளில் இருந்தும் மாணவ - மாணவியர் நேரு ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர். அதில், மாணவியர்கழிப்பறையில் பாம்பு ஒன்று வந்ததை பார்த்து, பதறியடித்து ஓடி வந்த மாணவியர், ஆசிரியர்களிடம் கூறினர்.உடனே, ஆசிரியர்கள் ஒலிபெருக்கியில், 'மாணவியர் யாரும் கழிப்பறை செல்ல வேண்டாம்;பாம்பு வந்து விட்டது' என, கூறினர். இதைஸ்டேடியத்தில் இருந்த ஊழியர்கள், வழக்கம் போல, 'பம்பு ரிப்பேர் ஆகி தண்ணீர் இல்லாததால், கழிப்பறை செல்ல வேண்டாம் என கூறுகின்றனர்' என நினைத்து, அமைதியாக இருந்தனர்.சில ஆசிரியர்கள் நேரடியாக அவர்களிடம் சென்று, 'கழிப்பறைக்குள் பாம்பு வந்து விட்டது... உடனே வாங்க...' என கூப்பிட, 'அச்சச்சோ பாம்பா... நாங்க பம்புன்னு நினைத்தோமே...' என்றபடி, ஊழியர்கள் கம்புடன் பாம்பை விரட்டுவதற்கு ஓட, ஆசிரியர்கள் தலையில் அடித்தபடி நகர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 10, 2024 19:12

Correction - பம்பாகி விட்டது


D.Ambujavalli
செப் 10, 2024 19:11

பாம்புக்கு கால் இல்லை, அது பாம்பாகி விட்டது மனைவி யாராவது கடிபட்டுக் கிடந்திருந்தால் கூட கவனித்திருக்க மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை