உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாட, கோவை மாவட்டம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் முன் தி.மு.க.,வினர் திரண்டனர். வழக்கம் போல் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.அப்போது, சிலர் தட்டில் மாம்பழங்களை அடுக்கி ரோட்டுக்கு எடுத்து வந்தனர். லட்டுக்கு பதிலாக, மாம்பழங்களை மக்களுக்கு வழங்கப் போகின்றனர் என, அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால், அவற்றை ஆளுக்கொன்றாக கையில் எடுத்து, கசக்கிப் பிழிந்து ரோட்டில் வீசியெறிந்து, தி.மு.க., வெற்றியையும், பா.ம.க., தோல்வியையும் கொண்டாடினர். அங்கிருந்த ஒருவர், 'சாப்பிடுற பழத்தை, இப்படியா ரோட்டில் பிழிஞ்சு வீணாக்குவது... அதை நமக்கு கொடுத்திருந்தால், வீட்டுல ஜூஸ் போட்டாவது குடிச்சிருக்கலாம்... இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 17, 2024 16:40

அந்தப் பழங்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் எவ்வளவு மெனக்கெட்டிருப்பார்கள் ? 'குயவனுக்கு நாலுநாள் வேலை, தடியனுக்கு நிமிஷ வேலை' என்பார்கள் இயற்கையை அவமதிக்கும் செயல் இது சரி, பலாப்பழத்தை இப்படி தெருவில் போட்டு என் உடைக்கவில்லை ?


VENKATESAN V
ஜூலை 17, 2024 10:56

சிறுமதியாளர்கள். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கவே


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2024 06:07

முட்டாள்களின் கையில் சிக்கிய மாம்பழத்தின் கதி என்ற சொலவடை


புதிய வீடியோ