உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மண்ணை மலடாக்கவே அறிவுரை!

மண்ணை மலடாக்கவே அறிவுரை!

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இயற்கை முறையில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள், 'ஆத்துார், தலைவாசல் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில், அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். வேளாண் அதிகாரிகள், 'ரசாயன பூச்சி கொல்லிகளை பயன்படுத்தினால் படைப்புழுக்கள் அழிந்து விடும்' என, தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள், 'நஞ்சில்லா விவசாயம் செய்து வரும் எங்களை, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சொல்வது சரியா' என, கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல் வேளாண் அதிகாரிகள் நெளிந்தனர். விவசாயி ஒருவர், 'மண்ணை மலடாக்கத் தான் வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்குறாங்க... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க எதுவும் செய்றதில்லை...' என, புலம்பியபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Prof.Dr.H.Vijayaraghavan
அக் 04, 2025 13:55

100 % organic farming is impossible. Integrated pest or nutrient management is only the way.


D.Ambujavalli
அக் 03, 2025 18:42

கலெக்டர் அம்மாவோ அதிகாரிகளோ விவசாயத்தில் எந்த முன்னனுபவமும் இல்லாமல், மாதம் ஒரு கூட்டம் நடத்திவிட்டோம் என்று கணக்கு காட்டிவிட்டுப் போகத்தான் பார்ப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை