உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லையா?’

‘ரீல்ஸ் மோகத்துக்கு அளவில்லையா?’

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் பகுதியில், சமீபத்தில் கலெக்டர் மாலதி ஹெலன் ஆய்வு செய்தார். திருவொற்றியூர் த.வெ.க., – எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். அந்த குழுவினர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக நீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டனர். அப்போது, த.வெ.க.,வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பகிங்ஹாம் கால்வாயின் பக்கவாட்டு சுவர் மீது ஏறி நின்றபடி, கால்வாய் பக்கமாக சாய்ந்த நிலையில், ‘ரீல்ஸ்’ போடுவதற்காக, தன் மொபைல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த நிருபர் ஒருவர், ‘இவங்க, ‘ரீல்ஸ்’ மோகத்துக்கு அளவே இல்லையா...? கீழே விழுந்து தொலைச்சா, யார் வந்து காப்பாத்துவாங்க’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 17, 2026 20:04

இந்த. மொபைல். பேசிக்கொண்டு. ரயில். வருவதை. பாராமல். அடிபட்ட. வரலாறுகள். உண்டு. அந்த. வகையில். இனி. 'ரீல்ஸ். மரணங்கள்' என்ற. தலைப்பிலும். எண்ணிக்கை. உயருமோ. என்ற அச்சம். அவர்களுக்கு இல்லாவிட்டாலும். - நமக்கு. ஏற்படுகிறது என்ன. ஒரு. பொறுப்பற்ற. சாகசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை