வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல அறிவுரை
மேலும் செய்திகள்
மின்கள பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு பயிற்சி
10-Dec-2025
திருப்பூர் மின் வாரிய கோட்டத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம், சமீபத்தில் திருப்பூரில் நடந்தது. இதில், ஊத்துக்குளி கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் பேசுகையில், 'மேற்பார்வை பணியாளர் தவறு செய்தால் திருத்திக் கொள்ளலாம்; களப்பணியாளர் கவனக்குறைவாக இருந்தால், உயிரை இழக்க நேரிடும். 'மொபைல் போனில் பேசிக் கொண்டே பணிகளை செய்வதால் தான் விபத்துகளும், உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. மின்சாரம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, பழுது நீக்கும் பணிக்காக மின் கம்பத்தில் ஏற வேண்டும்...' என்றார். இதை கேட்ட களப்பணியாளர் ஒருவர், 'சார் சொல்றது ரொம்ப சரி... மொபைல் போன்ல பேசிக்கிட்டே பைக் ஓட்டி, எத்தனை பேர் உயிரை பறிகொடுக்கிறாங்க... நாமும், நம்மை நம்பி இருக்கிற குடும்பத்தை நினைச்சு, கவனமா இருக்கணும்பா...' என கூற, சக பணியாளர்கள் ஆமோதித்தனர்.
நல்ல அறிவுரை
10-Dec-2025