வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Allotment எல்லாம் முன்னமே முடித்துவிட்டு, குழுக்களிலும் அவர்கள் பெயர்களையே போட்டுவிட்டு வேலையை முத்தாலும் வியப்பில்லை
மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கீட்டிற்கான குலுக்கல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.முன்னதாக, நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி இயக்குனர் அன்பழகன் பேசும்போது, 'தரை தளத்தில் உள்ள வீடுகளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதய ஆப்பரேஷன் செய்தவர்கள் உரிய சான்றிதழ் சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம். 'பி.பி., இருக்கு... சுகர் இருக்கு' என, தரை தள வீட்டை யாரும் கேட்காதீர்கள். இன்னைக்கு எல்லாருக்குமே இந்த பிரச்னைகள் இருக்கு; எனக்கும் இருக்கு...'குலுக்கலில் வீடு தேர்வு செய்து, கையெழுத்து போட்ட பின், கட்சிக்காரங்க சிபாரிசை வாங்கிட்டு வந்து, 'வீட்டை மாற்றி தாங்க'ன்னு யாரும் வராதீங்க' என்றார். அதை கேட்ட முதியவர் ஒருவர், 'அது சரி... எந்த சிபாரிசா இருந்தாலும், குலுக்கலுக்கு முன்னாடியே முடிச்சிருங்கன்னு சொல்லாம சொல்றாரு போல...' எனக் கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.
Allotment எல்லாம் முன்னமே முடித்துவிட்டு, குழுக்களிலும் அவர்கள் பெயர்களையே போட்டுவிட்டு வேலையை முத்தாலும் வியப்பில்லை