உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பிரியாணி மட்டும் போதாது!

பிரியாணி மட்டும் போதாது!

மாமல்லபுரம் அருகே, சித்திரை முழுநிலவு மாநாட்டை பா.ம.க., நடத்தி முடித்தது. இம்மாநாட்டு வெற்றி விழா, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பா.ம.க., தலைவர் அன்புமணி, மனைவி சவுமியா மற்றும் மகள்களுடன் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்; அனைவருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், 'உங்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னது சவுமியா தான். நான், 'என் மனதையே அவர்களிடம் கொடுத்து விட்டேன். விருந்து கொடுக்க மாட்டேனா' என்று கூறி, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்...' என்றார்.கட்சி நிர்வாகி ஒருத்தர், 'பிரியாணி மட்டும் போட்டா போதாது... சட்டசபை தேர்தல்ல, 'சீட்' தர்றப்ப, எங்க உழைப்பையும் மனசுல வச்சுக்கணும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 21, 2025 03:36

‘பிரியாணி உங்களுக்கு, சீட்டுகள் எங்கள் குடும்பம், நட்புகளுக்கு’ இதற்குமேல் எதிர்பார்க்கலாமா தொண்டர்கள் …. எந்தக் காட்சியிலும் இதுதானே சட்டம்


புதிய வீடியோ