உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தி.மு.க., மரியாதை தரலையே!

தி.மு.க., மரியாதை தரலையே!

ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ, திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாக இருக்கும்போது அனைவரும் என்னுடைய மக்கள் தான்; இதில், அரசியல் பார்ப்பதில்லை. டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் போது, மக்கள் பிரச்னை பற்றிதான் பேசுவேன்.'மக்கள் பிரச்னைகளை பொறுத்த வரை, அரசியல் எல்லைகளை கடந்து தான் செயல்படுவேன். வைகோ மீது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் அரசியல் எல்லைகளை கடந்து மரியாதை வைத்துள்ளனர். அவர் சார்பாக, மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைக்கும்போது, அதற்கு ஒரு மரியாதை கிடைக்கிறது...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... ஆனா, வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு வச்ச கோரிக்கைக்கு, தி.மு.க., மரியாதை தரலையே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 10, 2025 16:52

இத்தனைக்கு நடுவிலும், தகப்பனாரை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரே, இவரைப்பார்த்து 'மற்ற கட்சி' புரிந்து கொள்ளுமா?


panneer selvam
ஜூலை 10, 2025 16:29

Durai Sir , after becoming MP of Trichy , he solved nearly all the pending problems and brought prosperity to Trichy people like he solved the Cauvery issues , NEET has abolished in Trichy , Trichy city traffic problems are solved but only one problem is K.N.Nehru does not allow him to visit Trichy .


முக்கிய வீடியோ