உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நாசுக்கா குத்தி காட்டுறாரோ?

 நாசுக்கா குத்தி காட்டுறாரோ?

திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் உள்ள அராபத் ஏரியை, 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர், காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நாசர், 'கேட்டவுடன் தொகுதி நிதியை எடுத்து கொடுப்பதில், எம்.பி., சசிகாந்த் செந்தில் , பாரி வள்ளல் போன்றவர்' என, புகழ்ந்து தள்ளினார். அதன் பின் பேசிய சசிகாந்த் செந்தில், 'அமைச்சர் நாசர், பாசத்தால் எல்லாரையும் அடித்து வேலை வாங் கிடுவாரு' எனக் கூற, அனைவரும் சிரித்தபடி கைதட்டினர். இதை கேட்ட, தி.மு.க., தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன் நாசர், ஏற்கனவே கட்சியினரை கல்லால அடிச்சதை தான், எம்.பி., நாசுக்கா குத்தி காட்டுறாரோ...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anantharaman Srinivasan
டிச 01, 2025 15:37

ஒரு சமயம் மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் கருணாநிதி பேசிக்கொண்டிருந்த போது மேடையில் கல் ஒன்று வந்து விழுந்தது. உடனே கலைஞர் அக்கல்லை ஏலம் விட்டார். அதையும் வாங்க தொண்டர்கள் போட்டி போட்டு வாங்கினர். எனவே கழகத்துக்கும் கல்லுகும் பாசபிணைப்பு உண்டு. நாசர் தொண்டர்களை கல்லால் அடித்தது பாசத்தால்யன்றி வேறுயில்லை.


Anantharaman Srinivasan
டிச 01, 2025 15:28

பல வருடங்களுக்கு முன் மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுகூட்டடத்திலல்


KOVAIKARAN
டிச 01, 2025 07:24

ஏரியை, 2 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணியை ஆரம்பிக்க எதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவேண்டும்? இது ஒன்றும் புதியதாக ஏரி வெட்டும் பணி இல்லையே? அதற்கும் கூட பூமி பூஜைதான் போடுவார்கள். MP தொகுதி பணம் மத்திய அரசு நிதியிலிருந்து கொடுப்பது. அதை முற்றிலும் செலவழிக்காமல் இது போன்ற வெட்டி விழா நடத்தி பணத்தை ஏன் வீணடிக்கவேண்டும்?


D.Ambujavalli
டிச 01, 2025 06:05

கட்சித் தொண்டரை அடித்து வரலாறு படைத்ததை இப்படி ஒவ்வொருவரும் நினைவூட்ட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை