உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘அதை மட்டும் ஏத்துக்க மாட்டாங்க!’

‘அதை மட்டும் ஏத்துக்க மாட்டாங்க!’

கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி சமீபத்தில் கரூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நாட்டின் தேர்தல் முறைகளில் இருந்த நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டு, குறுக்கு வழியில் தேர்தல் தில்லுமுல்லு மூலம், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. ‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளன. இந்தியாவில் நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறும் வரை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் தொடர்ந்து சமரசமின்றி போராட்டம் நடக்கும்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘அப்படின்னா, 2024 லோக்சபா தேர்தல்ல இவங்க ஜெயிச்சதுலயும் முறைகேடு நடந்திருக்குன்னு சொன்னா ஏத்துக்குவாங்களா?’ என முணுமுணுத்தார். சக நிருபரோ, ‘அதை மட்டும் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க’ என்றபடியே நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan
நவ 04, 2026 16:42

இந்தம்மாவைப் போல தரம் தாழ்ந்த அரசியல் வாதி யாரும் இருக்க முடியாது. பைசா செலவில்லாமல், தன்னை ஜெயிக்க வைத்த திமுக வை சப்பி போட்ட மாங்கொட்டையாக நடத்தும் இவர் யார்? இவரது தொகுதி மக்களுக்கு இவர் எவ்வளவு துரும்பை கிள்ளிப் போட்டிருக்கிறார் என்ற உண்மையைப் பார்த்தால் இவர் வெறும் வெத்து வேட்டு. டில்லி போய் ராகுல் காந்தி செய்யும் வெட்டி வீராவேச பேச்சு, பார்லி மெண்டு முடக்கம் ஆகியவற்றுக்கு அல்லக்கையாகவும் பின்பாட்டு பாடுகிறவர் ஆகவும் தான் இதுநாள் வரை செயல்பட்டு வந்துள்ளார். சொந்த முனைப்பில் எந்த நல்ல காரியமும் செய்ததே இல்லை இந்த அம்மணி


D.Ambujavalli
நவ 03, 2026 19:59

' அது எப்படி? நான் நின்ற தொகுதி. மக்களெல்லாம். நேர்மை , நீதியின். அவதாரமாயிற்றே அத்தனையும். 'சுத்தமான'. ஓட்டுகளாக்கும் '. என்பார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை