உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முதல்ல இடம் கொடுங்க!

முதல்ல இடம் கொடுங்க!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், அரசு துறை அதிகாரிகளின் அலட்சியம் குறித்து புகார் தெரிவித்தனர். ஒரு விவசாயி, 'நகராட்சியில் சாலையோரம் குப்பை கொட்டுகின்றனர். எனவே நோய் பரவும் அபாயம் உள்ளது' என, புகார் தெரிவித்தார். இதனால், கோபமான ஆர்.டி.ஓ., நகராட்சி அலுவலரை சகட்டு மேனிக்கு திட்டினார். அப்போது, தன் அருகில் இருந்த வருவாய் துறை அலுவலரிடம், நகராட்சி அலுவலர், 'குப்பை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு, 20 ஆண்டுகளாக வருவாய் துறையிடம் கடிதம் கொடுத்து வருகிறோம். நீங்க இதுவரை இடம் காட்டாததால், சாலையோரம் கொட்டி, பின்அப்புறப்படுத்துகிறோம். நீங்க முதல்ல இடம் கொடுங்க... அப்புறம் சாலையோரம் குப்பை கொட்டினால், எங்களை திட்டுங்க...' என முணுமுணுக்க, அவரும் தலையை ஆட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை