உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / புகழுற மாதிரி வாரி விடுறாரே!

புகழுற மாதிரி வாரி விடுறாரே!

சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.இதில், நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சியாளர் முகுந்தபூபதி பேசுகையில், 'பெண்களிடம் எந்த ரகசியமும் தங்காது. எந்த ஒரு விஷயமும், எளிதில் மக்களை சென்றடைய வேண்டும் என்றால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலில் பயிற்சி கொடுத்து விளக்கி விட்டால் போதும்... அவர்கள் வழக்கப்படி ஊர் முழுக்க பரப்பி விடுவர்.'இந்த நம்பிக்கையில் தான் அரசு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது' என்றார். இதைக் கேட்டு அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர்.முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், 'நம்மை புகழுற மாதிரி இப்படி வாரி விடுறாரே... இது தெரியாம எல்லாரும் கை தட்டுறாங்களே...' என, முணுமுணுத்தவாறு நடையைக் கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
பிப் 12, 2025 06:07

இது இருக்கட்டும் ‘அந்த ‘சார்’ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை leak செய்து பரப்பியது பெண்களா ?


Admission Incharge Sir
பிப் 12, 2025 10:27

யார் அந்த சார் மேட்டர் விஸ்வருபம் எடுக்கிறது, சார் சிக்கலில் மாட்டுகிறார் என்றுதானே அதை அப்படியே டைவர்ட் செய்வதற்கு அடுத்த வன்கொடுமையை கிளப்பிவிட்டார்கள். யார் அந்த சாருக்கு பிறகு நூறு வன்கொடுமைகள் அரங்கேறி நூறு சார்கள் உருவாகி விட்டார்கள். சார்களை உருவாக்குவதில் தமிழகம் சென்சுரி அடித்துக் கொண்டுள்ளது. ஆனால் தமிழ மக்கள் அடுத்த எலக்ஷன் எப்போ வரும், ஒரு ஐம்பது ரூபாயாவது சேர்த்துக் கொடுப்பார்களா என்று தான் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பேசிக்கலி ஐ ஆம் ஏ பிச்சைக்காரன்.


Vadakkuppattu Ramanathan
பிப் 12, 2025 12:02

இப்படி தமிழ் நாட்டில் அனைவரும் தேர்தலன்று கிடைக்கும் 500, 1000த்திற்கு ஆசைப்பட்டு ஊழல்வாதிகளைக் கடந்த 59 ஆண்டுகளாக மாற்றி மாற்றி தேர்ந்து எடுப்பது ஓரு பெரிய அவலம்.


சமீபத்திய செய்தி