வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அத்தனை யாராவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிந்து விளையாடுவார்களா?
மேலும் செய்திகள்
சொந்த காசில் சூனியம் வைத்த காங்., பிரமுகர்கள்!
28-Feb-2025
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அம்பத்துாரில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அவர் பேசுகையில், 'இப்போது தலைமை என்பது, எப்படி வேண்டுமானாலும் வரும். அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் எல்லாம், தலைவராக வேண்டும்என நினைக்கின்றனர். ஆனால், நம் முதல்வர் ஸ்டாலின் அப்படிப்பட்டவர் அல்ல. அவரது தந்தை கருணாநிதி போல, இளமை பருவத்தில் இருந்தே, இயக்க கொள்கைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர்...' என்றார்.இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'தலைமை பதவிக்கு அடுத்து தயாராகிற உதயநிதிக்கு பஞ்ச் வைக்கிறாரோ...?' என சந்தேகம் கிளப்ப, மற்றொருவர்,'இல்லப்பா... அப்படி பஞ்ச் வச்சா, இவரது மகன் கவுதம சிகாமணிக்கு தலைமை பஞ்ச் வச்சிடுமே... நடிகர் விஜயை தான் குத்தி காட்டுறாரு...' எனக் கூற, சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.
அத்தனை யாராவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறிந்து விளையாடுவார்களா?
28-Feb-2025