உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நான் ஜெயிலுக்கு போறேன்!

 நான் ஜெயிலுக்கு போறேன்!

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலக் குழு கூட்டம், தி.மு.க., மண்டலக் குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், நான்காவது வார்டு மா.கம்யூ., கட்சி கவுன்சிலர் ஜெயராமன் பேசுகையில், 'டெண்டர் ரத்து என்பது மக்களை பழிவாங்கும் நடவடிக்கை. அவசர பணிகளுக்கு, 'டெண்டர்' விடலாம் என்று சட்டம் உள்ளது. முறை தவறாமல் டெண்டர் விட அனுமதிக்க வேண்டும். இதற்காக போராடவும் தயார். அதற்காக, தி.மு.க., கவுன்சிலர் சொக்கலிங்கத்தை போல், என்னையும் தகுதி நீக்கம் செய்யுங்கள்' என, ஆவேசமாக பேசினார். அப்போது, குறுக்கிட்ட மண்டலக் குழு தலைவர் தனியரசு, 'இந்த ஆட்சியில் கைது செய்து சிறையில் அடைப்பர்' என்றதும், 'நானும் ஜெயிலுக்கு போறேன்' என்றார் ஜெயராமன். இதை பார்த்த நிருபர் ஒருவர், 'வடிவேலு காமெடி போல, நான் ஜெயிலுக்கு போறேன்; ஜெயிலுக்கு போறேன்னு ஜெயராமன் சொல்வாரு போலிருக்கே' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி