உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சீட் கிடைப்பது கஷ்டம் தான்!

சீட் கிடைப்பது கஷ்டம் தான்!

சென்னை, செங்குன்றத்தில், அ.தி.மு.க., சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான மாதவரம் மூர்த்தி பங்கேற்றார். கட்சியினர் மிகவும் குறைவாகவே கூட்டத்திற்கு வந்திருந்தனர்.அப்போது அவர் பேசுகையில், 'யாராவது ஒரு சாமியார் வந்தால் கூட, 10 பேர் கூட்டமாக சென்று பார்க்கின்றனர். ஆனால், மக்கள் ஆதரவு பெற்ற நம் கட்சி கூட்டத்தில், நிர்வாகிகள் கூட பங்கேற்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்' என, ஆதங்கப்பட்டார்.இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'கட்சிக்கு செயல் வீரர்கள் இருந்தால்தானே கூட்டத்துக்கு வருவாங்க... இந்த லட்சணத்துல ஆட்சியை பிடிக்க முடியுமா...?' என முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'இந்த தகவல் எல்லாம் பழனிசாமி காதுக்கு போச்சுண்ணா, நம்ம மாவட்ட செயலருக்கு தேர்தலில், 'சீட்' கிடைப்பது கஷ்டம் தான்...' என, 'கமென்ட்' அடித்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 04, 2024 19:44

முன்னாள்களுக்கே பழனிச்சாமியின் மீது நம்பிக்கை குறைந்து ஒவ்வொருவராகக் கழற்றிக்கொள்கையில் நிர்வாகிகள் எப்படி அக்கறையுடன் உழைப்பார்கள் கூட்டம் 'சேர்க்க' வேண்டிய ' பசைக்கு ' எங்கே போவார்கள்?


முக்கிய வீடியோ