உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / துாக்கி சாப்பிட்டிருவாங்க போல!

துாக்கி சாப்பிட்டிருவாங்க போல!

சென்னை, கொளத்துாரில், தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், 'திராவிட மாடல் ஆட்சியில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. சொகுசு விமானத்தில், நண்பருடன் திருமணத்திற்கு போகும் போலி அரசியல்வாதி அல்ல உதயநிதி. அவர் கடுமையான உழைப்பாளி. மழை வெள்ளம் போன்ற காலகட்டத்திலும் கடுமையாக உழைத்தவர்.'அவரை எதிர்த்து யார் நின்றாலும் டிபாசிட் பறிபோவது உறுதி. பா.ஜ., அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வந்த மாமன்னன் உதயநிதி. அவர் ஒரு நிஜ ஹீரோ...' என்றார்.இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர், 'இப்பதான் கட்சியில் சேர்ந்திருக்காங்க... உதயநிதி தான் கட்சியின் எதிர்காலம் என்பதை கணிச்சு பேசுறாங்களே... நம்மை எல்லாம் துாக்கி சாப்பிட்டுருவாங்க போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

vee srikanth
ஏப் 22, 2025 17:52

range rover சொகுசு கார் இல்லைங்கோ - சாதாரண கட்டை வண்டி தாங்கோ


vee srikanth
ஏப் 22, 2025 17:51

மன்னிப்பு கேள் என்று சொன்ன வை கோ வை தூக்கி சாப்பிட்டார் போலே -


Krishnamurthy Venkatesan
ஏப் 20, 2025 12:49

2026ல் MLA கனவு பேச வைக்கிறது.


Anantharaman Srinivasan
ஏப் 20, 2025 19:13

கனவு அல்ல. பலிக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 20, 2025 08:25

சுயமரியாதை பேசிய சத்யராஜின் மகள் சுயமரியாதையை இழந்து புகழ்ச்சி செய்து சம்பாதிக்கிறாரே ??


Dharmavaan
ஏப் 20, 2025 08:35

பச்சோந்தியின் பேச்சு எப்படியும் இருக்கும்


D.Ambujavalli
ஏப் 20, 2025 06:24

இவர் உதயநிதிக்கு வாரி வழங்கிய பாராட்டு மழை துர்கா அம்மா காதுக்கு எட்டி உயர்வுக்கு வழி வகுக்கும் என்று வெகு விவரமாகவே இருக்கிறார்,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை