வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அவர் ஏதோ மாதாந்திர கூட்டம், நாலு வார்த்தை பேசிவிட்டுப்போகத் தான் வந்தார் சத்துணவு ஊழலையெல்லாம் கிளறக்கூடாது மீறினால், 'அதிமுக ஆளா?' என்று இழுத்துப்போய் நாலு போடுவார்கள்
துாத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடந்த, ஊட்டச்சத்துமாத விழாவில், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்பங்கேற்றார்.அப்போது பேசுகையில், 'ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது, கரு உருவான நாள் முதல் குழந்தைக்கு, 2 வயது முடியும் வரை உள்ளது. கரு உருவாகும்போது, நல்ல சத்தான உணவை தாய் உட்கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். குழந்தை பிறந்ததும், ஆறு மாதம் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.'நல்ல சத்தான உணவை தர வேண்டும். பிறகு கீரை, பருப்பு, நெய் சாதம், உருளைக்கிழங்கு, தானிய வகை உணவுகள் அனைத்தும் கொடுத்து வர வேண்டும். 2 வயதில் குழந்தைகளுக்கு, 60 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்து விடும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இங்கு பாடம் எடுப்பதுடன்நிறுத்தி விடாமல், சத்துணவு முட்டைகள் கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு போகாம தடுப்பதிலும்அமைச்சர் கவனம் செலுத்தணும்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.
அவர் ஏதோ மாதாந்திர கூட்டம், நாலு வார்த்தை பேசிவிட்டுப்போகத் தான் வந்தார் சத்துணவு ஊழலையெல்லாம் கிளறக்கூடாது மீறினால், 'அதிமுக ஆளா?' என்று இழுத்துப்போய் நாலு போடுவார்கள்