உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘இப்ப மரியாதை தந்தா போதும்!’

‘இப்ப மரியாதை தந்தா போதும்!’

பெரம்பலுார் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அப்துல் ராசிக் தலைமையில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ரமேஷ் பேசுகையில், ‘பால்வளத் துறையில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் கறவை இயந்திரம், பால் கேன்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், இதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து, பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். ‘தமிழகத்தில் பயிர் விளைச்சலில் மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்து விருது பெற்ற விவசாயிகள் இறந்தால், அவர்களுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும்’ என்றார். இதை கேட்ட விவசாயி ஒருவர், ‘நாம உயிருடன் இருக்கும்போதே இந்த அதிகாரிகள் மரியாதை தந்தாலே போதும்’ என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 10, 2026 20:39

விவசாயம். நொடித்து போய். விரைவில். பல. விவசாயிகள். இந்த. Posthumas விருதுக்கு. உரியவர்களாகிவிடுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை