உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பாகிஸ்தானே காணாம போயிடும்!

பாகிஸ்தானே காணாம போயிடும்!

'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தேசியக்கொடி பேரணி நடந்தது.இதில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணா மலை பேசும்போது, 'சுதந்திரத்தின் போது பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு, பரஸ்பரம் மக்கள் எங்கு வசிக்க விருப்பமோ அங்கு போகலாம் என்று அனுப்பியதில் இருந்தே இப்பிரச்னை துவங்கியது. பாக்., இதுவரை பலமுறை நம் மீது போர் தொடுத்து, பலத்த அடி வாங்கியும் பாடம் கற்கவில்லை.'இம்முறை, பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வந்து அப்பாவிகள் உயிரை எடுத்த நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொரு நிலையாக நம் ராணுவம் பதிலடி அளித்தது. நம் நடவடிக்கையை உலக நாடுகள் எதுவுமே தவறு என்று கூறவில்லை. நம்மால் பாகிஸ்தானை எதுவும் செய்ய முடியும் என்று காட்டியிருக்கிறோம்...' என்றார்.பேரணியில் பங்கேற்ற ஒருவர், 'இனியும் நம்மிடம் பாகிஸ்தான் வாலாட்டினால், அந்த தேசமே வரைபடத்தில் இருந்து காணாமல் போயிடும்...' என முழங்கியபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி