உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தலைவர் தயவு வேணுமே!

தலைவர் தயவு வேணுமே!

தர்மபுரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், 'நீங்கள் எல்லாம் குண்டாகி விட்டீர்கள். ஆனால், திருமாவளவன் மெலிந்து விட்டார். அவரது சிறப்பே அது தான். உங்கள் தலை நிமிர்வதற்கு, திருமாவளவ ன் திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்க்கையை மெழுகுவர்த்தி போல உருக்கி கொண்டார். 'எங்களது சிதம்பரம் தொகுதி எம்.பி., திருமாவளவன், எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். நட்புக்கு அடையாளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்; பழகுவதற்கு இனிமையானவர்...' என்றார். கீழே இருந்த தொண்டர் ஒருவர், 'தேர்தல் வருதுல்ல... கடலுார், குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் ஜெயிக்க, நம்ம தலைவர் தயவு வேணுமே... அதான், ஓவரா ஐஸ் வைக்கிறாரு...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை