உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பிழைக்க தெரிஞ்ச பசங்க!

பிழைக்க தெரிஞ்ச பசங்க!

நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில்,அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி. பிரபாகரனின் மகன் அமலன் சாமுவேல் ஏற்பாட்டில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.விழாவுக்கு வந்த, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்தை வரவேற்க, கட்சி இளைஞர்கள் தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர்; சாலை முழுதும்பேனர்கள், கொடிக்கம்பங்களை வைத்திருந்தனர்.பிளக்ஸ் பேனரில், விஜய் படத்தை ஓரமாக போட்டுவிட்டு, ஆனந்த் படத்தை பெரிய அளவில் போட்டிருந்தனர்.பார்வையாளர் ஒருவர், 'இவங்க கட்சியில் எல்லா பொறுப்பிலும், ஆனந்த் சொல்றவங்களை தான் விஜய் நியமிப்பார்... அதனாலதான் விஜயை விட ஆனந்த் போட்டோ பெருசா இருக்கு... பிழைக்க தெரிஞ்ச பசங்க...' என முணுமுணுக்க, உடன் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 28, 2024 06:45

எல்லா இடத்திலும் இதுதானே நடக்கிறது பெரிய இடத்து மாப்பிள்ளையை தானே அணுகி காரியங்கள் சாதிக்கப்படுகின்றன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை