உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சாமர்த்தியமா சமாளிச்சிட்டாங்க!

சாமர்த்தியமா சமாளிச்சிட்டாங்க!

பக்க வாத்தியம் தஞ்சாவூரில் இரண்டு புதிய வழித்தடங்களில், தஞ்சாவூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., நீலமேகம் கொடியசைத்து பஸ் சேவையை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் எம்.எல்.ஏ., வருகைக்காக காத்திருந்தனர். அவர் வர தாமதமானதால், போக்குவரத்து கழக அதிகாரிகள், மேயர் ராமநாதன் உள்ளிட்டோரை வைத்து, ஒரு பஸ்சுக்கு மட்டும் கொடியசைத்து துவக்கி வைத்து, மேயரை வழியனுப்பினர்.பின், தாமதமாக அங்கு வந்த எம்.எல்.ஏ., நீலமேகத்திடம் கொடியை கொடுத்து, அவரையும் கொடியசைக்க வைத்து, மற்றொரு பஸ்சை இயக்கி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.பார்வையாளர் ஒருவர், 'எம்.எல்.ஏ.,வுக்கும், மேயருக்கும் உரசல் இருப்பதை அறிந்து, ஆளுக்கு ஒரு பஸ்சை கொடியசைக்க வச்சி அதிகாரிகள் சாமர்த்தியமா சமாளிச்சிட்டாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை