உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  2 எம்.எல்.ஏ.,க்களும் வரலையே!

 2 எம்.எல்.ஏ.,க்களும் வரலையே!

திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, புதுக்கோட்டையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தில், ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இருந்தோம். தற்போது, த.வெ.க., மாற்று அரசியலை முன் வைத்துள்ளது. ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவோம் என்றும், குறிப்பாக லஞ்ச, ஊழலுக்கு எதிராக ஆட்சி நடத்துவோம் என்றும் கூறியுள்ளது. அதற்காகத்தான் தற்போது த.வெ.க.,விற்கு ஆதரவளித்துள்ளோம். 'என்றைக்கு தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததோ, அன்றைக்கே நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வருவது என்று முடிவு செய்து விட்டோம்' என்றார். இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'இவங்க வெளியே வந்து என்ன பிரயோஜனம்... இவங்க கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் வர மறுத்துட்டாங்களே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
ஜூலை 27, 2026 18:31

அப்பா பிள்ளை இரண்டு பேருக்கும் பொழப்பு நடக்கணும். திமுக கூடாரம் காலி என்றவுடன் பா.ஜ., எதிர்ப்பு, திமுக கூட்டு என்று நொண்டி சாக்கு சொல்லி தவெகவுடன் ஒட்டிக்கொண்டு விட்டனர். இவர்கள் எதிர்பார்த்தளவு தவெகவில் வரவேற்பு இருக்காது.