வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பந்தியில் இடமில்லை என்கிற வருத்தம்
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா சமீபத்தில் விழுப்புரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஆறு காட்சிகள் வரை சினிமா திரையிடப்படும் என்ற அரசின் அறிவிப்பால், நள்ளிரவு வரை மக்கள் வந்து செல்லும்போது, பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்படும். அதனால், ஐந்து காட்சிகள் என்பதே தொடர வேண்டும். ‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் எந்த அரசும் பெறாத அவப்பெயரை, த.வெ.க., அரசு ஆறு மாத காலத்தில் பெற்றுள்ளது. ‘த.வெ.க.,வினர் தங்கள் அரசின் இயலாமையை மறைக்க, பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் பக்கம் திசை திருப்பி மடைமாற்றம் செய்து வருகின்றனர். இந்த அரசை முதல்வர் விஜய் நடத்துகிறாரா, அமைச்சர்கள் நடத்துகின்றனரா என்றே தெரியவில்லை’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘முதல்வர், அமைச்சர்களை எல்லாம் அதிகாரிகள் தான் வழிநடத்துறாங்க என்பது இவருக்கு தெரியாதோ?’ என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
பந்தியில் இடமில்லை என்கிற வருத்தம்