உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நமக்கும், விஜய்க்கும் தான் போட்டி!

நமக்கும், விஜய்க்கும் தான் போட்டி!

மதுரை, திருமங்கலத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், கட்சி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் வேலுமணி பேசுகையில், 'மதுரை மாநாட்டில், த.வெ.க., தலைவர் விஜய், 'அ.தி.மு.க., தலைமை யாரிடம் உள்ளது?' என்று பேசியுள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் என்பது அவருக்கு தெரியவில்லை. 'பழனிசாமி பற்றி பேச விஜய்க்கு உரிமை கிடையாது. அ.தி.மு.க., ஒருமுறை தோற்றால், மறுமுறை வீறுகொண்டு எழுந்து வெற்றி பெறும். அ.தி.மு.க., கூட்டணி, 210 தொகுதிகளில் வெல்லும். இதை விஜய் மட்டுமல்ல... யாராலும் தடுக்க முடியாது...' என்றார். தொண்டர் ஒருவர், 'தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் தான் போட்டின்னு விஜய் சொன்னாரு... இவர் பேசுறதை பார்த்தா, நமக்கும், விஜய்க்கும் தான் போட்டி போல இருக்கே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை