| ADDED : மே 10, 2025 10:30 PM
ஈரோடில் தி.மு.க., இளைஞர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்றார்; பின், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'பெருந்துறை சிப்காடில் சாயக்கழிவு பிரச்னையை தீர்க்க, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 40 கோடி ரூபாய் ஒதுக்கி, 52 கோடியாக உயர்த்தி, டெண்டர் இறுதி செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து, சுத்திகரிப்பு நிலையம் அமைப்போம்.'இதை அப்படியே போடணும். அமைச்சர் மழுப்பல் என போடக்கூடாது. இப்ப, 20 நிமிஷம் பேட்டி கொடுத்தேன். மாத்தி போட்டா அடுத்து, ரெண்டு மணி நேரம் பேட்டி தருவேன்' என, சிரித்தபடியே கூறினார்.மூத்த நிருபர் ஒருவர், 'அதுசரி... நாலு வருஷமா சும்மா இருந்துட்டு, தேர்தல் வரும்போது சுறுசுறுப்பு காட்டுறது நல்லாவே தெரியுது...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்து சிரித்தனர்.