| ADDED : செப் 21, 2025 11:35 PM
'பெண்கள் அதிக நகைச்சுவையாளர்கள் என்பது குற்றமே' என்ற தலைப்பில், சிரிப்பு வழக்காடு மன்றம், திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. ஆசிரியர் ரவிகுமார் வழக்கு தொடுத்தும், பேச்சாளர் மலர்விழி, எதிர்ப்பு தெரிவித்தும் வாதாடினர். கவிதா ஜவஹர் என்பவர் நடுவராக இருந்தார். பெண்கள் தரப்புக்கு ஆதரவாக மலர்விழி பேசுகையில், 'புது வருஷத்தை மது வருஷமாக மாற்றுவது யார்... குக்கிராமங்கள், 'கிக்' கிராமங்கள் ஆகிவிட்டன. பெண்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பர். அவர்கள் பக்கம் போனால், பூ மணக்கும், சென்ட், பவுடர் மணக்கும். மகிழ்ச்சி பொங்கும். 'ஆனால், ஆண்கள் பக்கம் போனால், பீர் பொங்கும். மொட்டை மாடிகளை எல்லாம், கெட்ட மாடியாக்கிடுறாங்க...' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், 'சரியாதான் சொல்றாங்க... கல்யாணம், கருமாதின்னு எதுவா இருந்தாலும், ஆண்கள், 'சரக்கு' அடிச்சிட்டு சலம்புறாங்க...' என, முணுமுணுக்க, சக பெண்கள் ஆமோதித்தனர்.