உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தினமும் அங்கிள்னு சொல்றாங்களே!

தினமும் அங்கிள்னு சொல்றாங்களே!

சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வான கே.பி.சங்கர், அப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், அவர் பேசுகையில், 'நேற்று கட்சி துவங்கிய விஜய் அணில் பிள்ளை. நம் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது போல், அவரை நம்பி செல்வோர் நடுத்தெருவில் தான் நிற்பர். பெற்ற தாய் - தந்தையை உடன் வைத்துக் கொள்ளாத அவர், மக்களுக்கு எப்படி நல்லது செய்வார். 'முதல்வரை, அங்கிள், அங்கிள் என நாகரிகமற்ற முறையில், பொது மேடையில் பேசியுள்ளார். ஜெயலலிதா போல் முதல்வர் ஸ்டாலின் இருந்திருந்தால், விஜய் தொலைந்து போயிருப்பார். ஸ்டாலின் அனைவருக்குமான தலைவராகவும், அரவணைத்து செல்லக்கூடியவர் என்பதாலும், அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'விஜய் ஒரு நாள் தான் முதல்வரை அங்கிள்னு சொன்னார்... அவரை திட்டுறேன்னு, தி.மு.க.,வினர் தினமும் சொல்றாங்களே...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி