மேலும் செய்திகள்
எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இ- - சேவை மையம் திறப்பு
30-Oct-2025
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி, தி.மு.க., -- எம்.பி., செல்வம் ஆகியோர், மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர். முன்னதாக, அனைவரையும் வரவேற்று பேசிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நளினி, முதல்வர் ஸ்டாலின், எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகியோரை புகழ்ந்து, 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினார். இதை கேட்ட ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர், 'நம்மை விட அரசு அதிகாரிகள், நம்ம ஆட்சியை ஏகத்துக்கும் புகழ்ந்து பேசுறாங்களே...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'கொஞ்சம் விட்டா, நம்மையே துாக்கி சாப்பிட்டிருவாங்க பா...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிர்வாகிகள் சிரித்தனர்.
30-Oct-2025