உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இது சகஜம் தான் போல!

இது சகஜம் தான் போல!

தர்மபுரி மாவட்டம், அரூரில் புது பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், அரூர் டவுன் பஞ்., தலைவர் இந்திராணி மேடையில் அமர்ந்திருக்க, அவருடைய கணவரும், டவுன் பஞ்., துணைத் தலைவருமான சூர்யா தனபால்நின்று கொண்டிருந்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'நம்முடையசூர்யா தனபாலின் மனைவி இந்திராணி அம்மையார், உட்கார்ந்து இருக்கிறார். அவருடைய கணவர், பாவம் நின்று கொண்டிருக்கிறார். இது, உள்ளாட்சி பதவிகளில்மகளிருக்கான, 50 சதவீதம் இட ஒதுக்கீட்டின் சாதனை' என்றார்.தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகையில், 'சூர்யா தனபால் நின்று கொண்டிருக்கிறார் என பன்னீர் செல்வம் சொன்னார். இங்கு மட்டுமல்ல, அங்கேயும் அப்படித்தான்' என, பன்னீர்செல்வத்தை பார்த்து சிரித்தபடியே கூறினார்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'எல்லார் வீட்டுலயும்இது சகஜம் தான் போல...' என கமுக்கமாக கூற, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
நவ 02, 2024 19:00

மனைவி பதவியில் 'உட்கார்ந்து' கொண்டிருப்பார் கணவர் நின்றும், ஓடியாடியும் கமிஷன் தேற்றிக்கொண்டிருப்பார் அவர் உட்கார்ந்தால் வருமானம் பாதிக்குமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை