உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  டூர் வந்துட்டு போயிடுறாங்க!

 டூர் வந்துட்டு போயிடுறாங்க!

நீலகிரி மாவட்டம், குன்னுாரில் சமீபத்தில் நடந்த தே.மு.தி.க., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா பங்கேற்றார். அவர் பேசும்போது, 'நீலகிரியில் மூன்று எம்.எல்.ஏ.,க்கள்; ஒரு எம்.பி., இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. வெளியூரில் இருந்து இங்கு வந்து ஜெயிப்பவர்கள், எம்.பி.,யாகி டில்லி சென்று விடுகின்றனர்; இங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள் சென்னை சென்று விடுகின்றனர். 'இங்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல யாருமில்லை. மக்களே... நீங்கள் தெளிவாக இருங்கள். நீலகிரியில் ஓட்டுரிமை பெற்று இங்கு வசிப்பவர்கள் மட்டுமே எம்.பி.,யாக வேண்டும். மக்களுக்கு நன்மை செய்பவர்கள், எம்.எல்.ஏ.,வாக வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்...' என பேசினார். இதை கேட்ட முதியவர் ஒருவர், 'இது சுற்றுலா தலம் என்பதால், டூர் மாதிரி வந்து ஜெயிச்சிட்டு போயிடுறாங்க... நாங்க என்ன பண்றது...?' என, புலம்பியபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ