உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / விஜய் கட்சிக்கு 114 தொகுதி!

விஜய் கட்சிக்கு 114 தொகுதி!

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ராஜா, 'நாம் இந்தியர்' என்ற பெயரில், ஒரு கட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது; 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.தொடர்ந்து, நிருபர்களிடம் ராஜா கூறும்போது, '2026 சட்டசபை தேர்தலில், எங்களின், நாம் இந்தியர் கட்சி சார்பில், 120 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். 'தேர்தல் அறிவிப்புக்கு பின், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியா என முடிவு செய்யப்படும். விஜய் செல்வாக்கான நடிகர்... தேர்தல் நேரத்தில் அவர் எங்களை அணுகினால், கூட்டணி குறித்து முடிவு செய்வோம்...' என, 'சீரியசாக' பேசினார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஒருவேளை விஜய் கூட்டணிக்கு வந்தா, தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், மீதமுள்ள, 114 தொகுதிகளை அவருக்கு ஒதுக்குவார் போல...' என, கிண்டல் அடித்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhaskaran
ஏப் 22, 2025 14:11

கோவிந்தா


Yes your honor
ஏப் 21, 2025 11:39

என்னது, பொதுக்குழுவில் 10 பேரா? யார் அந்த மாற்றுக் கட்சி ஒற்றர்கள் 10 பேர்?


D.Ambujavalli
ஏப் 21, 2025 06:17

இவர் கட்சி ஆரம்பித்ததே இன்னும் யாருக்கும் தெரியாது இதில் கூட்டணிக்கு விஜய் வந்து தொங்கப்போகிறாராமா ? இதெல்லாம் கேட்க தமிழரின் விதி எவ்வளவு மோசமாகிவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை